Home பெண்கள் அழகு குறிப்பு கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்

கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்

16

Captureகைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். சில இயற்கை வழிகளைப் பின்பற்றி உங்கள் கைவிரல் மூட்டுக்கள் உள்ள கருமையை போக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிகளைப் பின்பற்றினால், உங்கள் கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமைகளை விரைவில் போக்கலாம்.

2 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

1/2 டீஸ்பூன் ஜொஜோபா ஆயில், 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1/2 டீஸ்பூன் ரோஸ்மேரி ஆயில் மற்றும் 3 துளி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கை விரல் நகங்கள் மற்றும் கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இக்கலவையைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும். இதை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.