Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கைகளுக்கு வலிமை தரும் ஃப்ரீ வெயிட் பயிற்சிகள்

கைகளுக்கு வலிமை தரும் ஃப்ரீ வெயிட் பயிற்சிகள்

15

9fc00d6e-35fc-48d6-bc26-b9fcef65f59f_S_secvpfஉடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும்.

உடலை உறுதியாக்கும் பயிற்சிகள் பெரும்பாலும், கருவிகள் ஏதும் இன்றி செய்யக்கூடியவை. சில பயிற்சிகளுக்கு, சிலம்பம் ஸ்டிக், டம்பெல், மெடிசின் பால் பயன்படுத்தலாம். பயிற்சியை 15 முறை செய்வதை, ஒரு செட் என்போம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு செட்கள் செய்யலாம். பிறகு, படிப்படியாக செட்களின் அளவை அதிகரிக்கலாம்.

வால் புஷ் அப்ஸ் (Wall Push ups) :

கால்களைச் சற்று அகட்டியபடிவைத்து, நேராக நிற்க வேண்டும். இப்போது, கைகளைச் சுவற்றில் பதித்து, முழு உடலும் கைகளில் தாங்கும்படி நிற்க வேண்டும். இப்போது, கையை மடித்து, நெஞ்சுப் பகுதியை சுவர் அருகில் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பலன்கள்: நெஞ்சுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்குகிறது. அழகிய வடிவமைப்பைத் தருகிறது. கைகளுக்கு வலு அளிக்கிறது.

டம்பெல் சீட்டட் ரோ (Dumbbell seated row) :

நாற்காலியில் கால்களைச் சற்று அகட்டியபடி, உடலை முன்பக்கம் சாய்த்து உட்கார வேண்டும். கைகள் மூட்டுக்கு வெளிப்பகுதியில் இருக்க, கைகளில் டம்பெல் கருவியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, டம்பெல்லை நெஞ்சு வரை கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பலன்கள்: மேல் முதுகெலும்பு, கைத்தசைகளுக்கு வலு தரும் பயிற்சி இது.