Home சமையல் குறிப்புகள் கேரளா மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி

கேரளா மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி

35

201609170827078298_mutton-roast-kerala-style_secvpfதேவையான பொருட்கள் :

மட்டன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பொட்டுக்கடலை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு…

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 6 பெரிய பற்கள்

செய்முறை :

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த விழுதை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, அதனை குக்கரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்ட வேண்டும்.

* கடைசியாக அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!