தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – சுவைக்கு
சமையல் எண்ணெய் – தேவைக்கு
தண்ணீர்
துருவிய கேரட் – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
வெல்லம் (துருவியது) – அரை கப்
செய்முறை
:
• கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான தண்ணீர் சோத்து நன்கு மென்மையான மாவு பதத்தில் பிசைந்து
கொள்ளவும்.
• சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.
• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கேரட் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கிளறவும்.
• அதில் துருவிய கேரட்டை சேர்த்து கேரட்டின் ஈரப்பதம் போகும் வரை நன்றாக கிளறவும். பின்பு கலவையை ஆறவிடவும்.
• கோதுமை மாவை சிறிய உருண்டையாக உருட்டி அதை கைகளால் தட்டையாக்கவும். பின்பு நடுவில் கேரட் கலவையை வைத்து
நன்றாக மூடி சிறிது எண்ணெய் தொட்டு போளியை தேய்த்து எடுக்கவும்.
• தோசைகல்லில் சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் போளியை நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
• இப்போது சுவையான ஆரோக்கியமான கேரட் கோதுமை போளி ரெடி.