Home அழகு குறிப்பு கூந்தல் அழகு கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழிகள்…

கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழிகள்…

52

பெண்கள் அனைவரின் மனதிலும் நீளமான, அடர்த்தியான, பட்டு போன்று கூந்தல் இருக்க வேண்டும என்று நினைப்பார். ஆனால் அவ்வாறு நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முறையான பராமரிப்பு இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய பராமரிப்பிற்கு அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் இருந்தே ஈஸியாக எந்த ஒரு பக்க விளைவு மற்றும் வறட்சி இல்லாமல், கூந்தலை பட்டுப் போன்று மாற்ற முடியும். அது எப்படியென்று தெரிந்து கொள்ளுங்களேன்…
கூந்தல் வறட்சியைப் போக்க…
1. வறட்சியான கூந்தலுக்கு முட்டை மற்றும் தயிர் மிகவும் சிறந்த பொருட்களாகும். அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 5 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் மூல்தானி மெட்டி ஆகியவற்றை நன்கு கலந்து முடிகள் மற்றும் முடிகளின் மயிர்கால்களில் நன்கு படும்படி தடவ வேண்டும். பின் அது நன்கு காய்ந்ததும், மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். அதனால் முடியானது மென்மையாவதோடு, சுத்தமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது ஒரு சிறந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னரும் கூட.
2. ஒரு கப் மயோனைஸ் எடுத்துக் கொண்டு, அதனை எண்ணெய் ஆகும் வரை சூடுபடுத்தவும். பின் அந்த எண்ணெயை தலை முடிக்கு தடவி, பிளாஸ்டிக் கவரால் கட்டிக் கொள்ள வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு நன்கு அலச வேண்டும்.
3. ஒரு ஸ்பூன் சீகைக்காய் பவுடரை ஒரு கப் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தலுக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால் கூந்தலானது வறட்சி இல்லாமல், மென்மையாகவும், பளபளப்போடும் மின்னும்.
4. வாழைப்பழம் ஒன்றை நன்கு பிசைந்துக் கொள்ளவும், பின் அதோடு ஒரு கப் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். அந்த கலவையை கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசி குளிக்க வேண்டும். இதனால் கூந்தலுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
5. தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, அதை கூச்தலின் மயிர்கால்களில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அதனால் தலையில் இருக்கும் பொடுகு போவதோடு, வறண்ட கூந்தலும் மென்மையை அடையும்.
அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமான கூந்தலைப் பெற, பயணம் செய்யும் போது, கூந்தலை நன்கு துணியால் மூடிக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு நாள் விட்டு கூந்தலை நீரில் அலச வேண்டும் மற்றும் படுக்கும் முன் நன்கு கூந்தலை நன்கு சீவிக் கொண்டு படுக்க வேண்டும். இவற்றாலும் கூந்தலானது நன்கு ஆரோக்கியத்துடனும், வறட்சி இல்லாமலும் இருக்கும்.