Home உறவு-காதல் கூச்ச சுபாவம் கொண்ட காதலருடன் டேட்டிங்கா? இந்த டிப்ஸை படிங்க..

கூச்ச சுபாவம் கொண்ட காதலருடன் டேட்டிங்கா? இந்த டிப்ஸை படிங்க..

30

அமைதியாக இருக்கும் ஆண்கள் பொதுவாக அவர்களுக்குள் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள். பொதுவாகவே அவர்கள் நண்பர்கள் அல்லது
மற்றவர்களுடன் அதிக நேரத்தை செலவு செய்து மகிழ்வது கிடையாது. எந்த ஒரு காரியத்திலும் யாரையும் எதிர்பார்க்காத மனிதர்கள் இவர்கள். இதை ஆங்கிலத்தில் ‘இன்ட்ரோவர்ட்’ என்று சொல்வார்கள். அவர்களால் அனைவருடனும் பழக முடியாது மற்றும் நிறைய நண்பர்களை தனக்காக தேர்தெடுக்கவும் தெரியாது. இந்த ரகத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவும் மனநிலை இல்லாதவர்களும் கூட.

முதல் முறை டேட்டிங் போறீங்களா? இதோ சில டிப்ஸ்… டேட்டிங் செல்லும் போது ஆண்களை கவரும் வகையில் பெண்கள் எடுக்கும் பொதுவான முயற்சிகள் இத்தகைய ஆண்களிடம் எடுபடாது. ‘இன்ட்ரோவர்ட்’ குணமுடைய ஆணுடன் டேட்டிங் செய்வது சிறிது கடினம் தான். சில எளிய டிப்ஸ்களை பயன்படுத்தினால் அது சுலபமாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் மிக சகஜமாக அனைவருடனும் பழகும் நபராக இருந்தால் இத்தகைய ஆணை சமாளிப்பது மேலும் கடினமாகி விடும்.

 

மேற்கூறியவைகளைக் காட்டிலும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால் மிக சிறப்பான முறையில் நேரத்தை செலவிட முடியும். அதுமட்டுமல்லாமல் இருவரும் அனுசரணையாக, அவரவர் விஷயத்தில் அதிகம் தலையிடாமல் இருந்தால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது. டேட்டிங் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி மற்றும் குறிப்புகளை பற்றி நாம் தற்போது பார்ப்போம்:

இடம்:
‘இன்ட்ரோவர்ட்’ குணமுடைய உங்கள் ஆணுடன் நீங்கள் செல்லும் இடம் மிகவும் கூட்டமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் கூட்டமாகவும் பிஸியாகவும் இருக்கும் இடத்தில் சகஜமாக பழக விரும்ப மாட்டார்கள். நிறைய பேரின் மத்தியில் தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ள இவர்கள் தயங்குவார்கள். ஆகையால் இத்தகைய இடங்களை தவிர்ப்பது நல்லது. இருவருக்கும் பிடித்த மற்றும் நேரம் கழிக்க கூடிய இடத்திற்கு சென்றால் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். தேர்ந்தெடுக்கும் இடம் இருவருக்கும் இதமும் சந்தோஷமும் தரும் இடமானதாக இருத்தல் அவசியம். அது உங்களின் அன்பை வெளிக்கொணரும் இடமாகவும், தேவையான தனிமையை தரக்கூடிய இடமாகவும் அமைய வேண்டும். இந்த குறிப்பு மிகவும் முக்கியமான மற்றும் அவசியமாக குறிப்பாகும்.

குழு:
நீங்கள் வெளியே செல்லும் போது வேறு நண்பர்களையோ அல்லது மற்றவர்களையோ உடன் அழைத்துச் செல்வது நல்லது கிடையாது. மிகவும் முக்கியமாக நீங்கள் கூட்டிச்செல்லும் ஆணிற்கு தெரியாத நபரை நிச்சயம் கூட அழைத்து செல்வது சிரமத்தை விளைவிக்கும். ‘இன்ட்ரோவர்ட் ஆண்கள்’ பொதுவாகவே தெரியாத நபர்களுடன் பேச விரும்புவதில்லை. நீங்கள் தீட்டும் திட்டத்தில் உங்கள் இருவரை மட்டும் கருத்தில் கொண்டு செய்தால் நலமாய் இருக்கும். இத்தகைய சேர்க்கைகள் அவர்கள் வெளிப்படையாக பழகுவதற்கும் உங்களுடன் தனித்துவமாக பேசவும் அன்பை வெளிப்படுத்தவும் தடையாக அமையும். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து அறிந்த பின்னர் உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேசும் வகை: ‘இன்ட்ரோவர்ட்’ வகையை சேர்ந்தவர்கள் பேச மாட்டார்கள் பிறர் வளவளவென பேசுவதையும் விரும்ப மாட்டார்கள். ஆகையால் உங்கள் முதல் சந்திப்பில் பெரிய பெரிய கதைகளை சொல்லி அவரை எரிச்சல் மூட்டி விடாதீர்கள். துவக்கத்தில் சிறிய பேச்சுக்கள் மூலம் துவங்குங்கள். அதுவே மெதுவாக பெரிய கதைகளில் கொண்டு விடும். இருவரும் சமமாக உரையாடுதல் அவசியம். நீங்கள் மட்டும் பேசுவது அவரை கோபமூட்டக்கூடும். ஒரு வேளை அவர் உங்களுடன் பேசிக்கொண்டு இருந்தால் அதை கவனியுங்கள் பின்னர் நீங்கள் பேசுங்கள். நடுவில் குறுக்கிடாதீர்கள்.

நேரம் கொடுங்கள்:
இந்த குணம் கொண்டவர்கள் தங்களின் வாழ்க்கை சரித்திரத்தை முதல் முறையில் வெளிப்படுத்த விரும்பாதவர்கள். அவர்களுக்கு அவகாசம் கொடுங்கள். நீங்களாக அவர்களிடம் கேட்டாலும் அவர்களால் அதை விளக்க முடியாது. முதல் சந்திப்பிலேயே நிறைய கேள்விகளையும் கேட்காதீர்கள். அவர்களாகவே இதை எல்லாம் கூறும் வரை அமைதி காத்திருங்கள்.
உண்மையான குணம்: உங்களுக்கு என்று உண்மையான குணங்கள் உண்டு அதுபோல் அவருக்கும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவரின் குனங்களை உங்களுக்காக மாற்ற நினைக்காதீர்கள். உங்களையும் இதற்காக மாற்ற வேண்டாம். இருவருக்கும் இடையில் உள்ள பரஸ்பரம் மற்றும் அன்பு ஆகியவை உங்களிருவரின் இணைப்பின் பலமாக அமையும்.