Home குழந்தை நலம் குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!

குழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி!

22

mom giving homogenized food to her daughter on high chair. Horizontal shape
mom giving homogenized food to her daughter on high chair. Horizontal shape
இன்றைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு, ஏராளமான பாஸ்ட் புட் அயிட்டங்கள், இனிப்புகள், பிஸ்கெட்டுகள் வந்து விட்டன. வீட்டு உணவை வெறுக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து உணவு வேண்டவே வேண்டாம் என்று, அடம் பிடிக்கும் குழந்தைகளை, சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

மிரட்டாதீர்:

பெரியவர்களுக்கு ஏற்ற சுவையில் சமைத்து விட்டு, அதை சாப்பிடும்படி குழந்தைகளை மிரட்டாதீர். உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால், அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால், அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

சாய்ஸ் கொடுங்கள்:

2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து, ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க, குழந்தைகளிடையே உருவாகும் போட்டியை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையலில் உதவட்டும்:

கிச்சனில் நீங்கள் சமைக்கும்போது, குழந்தைகளின் உதவியை கேளுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில், உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!

வெரைட்டியாக சாப்பிடட்டும்:

பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே, குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா? என்றெல்லாம் சொல்வதை விட்டு, அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பசித்து சாப்பிடட்டும்:

நாம் சாப்பிடும் நேரங்களில், குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்த குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும். இதை தவிர்க்க, குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால், அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும். சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி/துருவி அல்லது நன்றாக அரைத்து/மசித்து, குழந்தைகளுக்கு பிடித்த உணவுடன் கலந்து விடலாம். இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. இந்த ஆலோசனைகளை பின்பற்றினால், ஒரே வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால், ஒரே மாதத்தில் மாற்றத்தை உணரலாம்!