Home குழந்தை நலம் குழந்தையின் கால் ஊனத்தைத் தடுக்க…

குழந்தையின் கால் ஊனத்தைத் தடுக்க…

17

images (1)தாயின் வயிற்றில் சிசு உருவாகி சில வாரங்களில் வளர்ச்சி பெறும். அவ்வாறு வளர்ச்சி பெறும் காலத்தில் ஏற்படும் சில பிரச்னைகள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் பிரச்னைகளை, குழந்தை பிறந்த ஆரம்ப சில நாள்களில் சரி செய்யும் நிலையில் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வளர முடியும்.

இதில் சில நேரங்களில் குழந்தை பிறக்கும் போது உடலின் வெளிப்புற உறுப்புகளான கை, கால்களில் வளர்ச்சி மற்றும் தோற்றக் குறைபாடு ஏற்படும். இத்தகைய பிரச்னைகள், பிறவிக் குறைபாடு மற்றும் நிரந்தரமாகத் தீர்க்க முடியாதவை என்ற தவறான கருத்து பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது. அவ்வாறு ஏற்படும் குறைபாட்டை எளிய சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும்.

செரிபரல் பால்சி: இதில் குழந்தை பிறக்கும் போது மூளைக்கு போதிய பிராணவாயு செல்லவில்லை என்றால் குழந்தை மூளை வளர்ச்சி பாதிப்புக்கு ஆளாகும். இதன் காரணமாக குழந்தையின் கை, கால் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

இதற்கு உரிய நேரத்தில் எளிய முறையில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க முடியும். அதே நேரத்தில் காலம் கடந்து சிகிச்சை அளிக்கும் போது செலவு அதிகரிக்கும். மேலும் பிறவிக் குறைபாடு எனக் கருதி சிகிச்சை அளிக்காமல் விடும் நிலையில், அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் ஊனத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தப் பிரச்னையால் நரம்புகள் பாதிக்கப்பட்டு போகப் போக குழந்தையின் கால் தசை நார் இறுகி சரியாக நடக்க முடியாத நிலை ஏற்படும். இதனை குழந்தை 2 முதல் 3 வயது இருக்கும் போது சரியான பரிசோதனை செய்து இறுகிய தசைநாரை சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தளர்வாக்குவதன் மூலம் குழந்தையை நன்றாக நடக்கச் செய்ய முடியும்.

கிளப் புட் (பிறவி வளைபாதம்): தாயின் கர்ப்பப் பையில் குறுகிய நிலையில் வளரும் குழந்தை பிறக்கும் போது பாதம் உள்நோக்கி வளைந்த நிலையில் காணப்படும். அதனால் குழந்தையின் குதி கால் தரையில் படாமல் காணப்படும். இதை பிறந்த குழந்தையின் நரம்புகள் மென்மையாக இருக்கும் போதே மாவுக் கட்டு போட்டு 4 மாதங்களில் குழந்தையின் வளைந்த பாதங்களை 100 சதவீதம் சரி செய்ய முடியும்.