Home குழந்தை நலம் குழந்தைகள் தலைமுடிய இப்படித்தான் பராமரிக்கணும்…

குழந்தைகள் தலைமுடிய இப்படித்தான் பராமரிக்கணும்…

42

குழந்தைகள் விஷயத்தில் உங்களுக்கு எப்போதுமே அக்கறை உண்டு. அதிலும் பெண் குழந்தைகளுக்கு மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவது உண்டு. ஆனால் தற்போது அழகு சார்ந்த விஷயத்தில் ஆண், பெண் வித்தியாசம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது.

குழந்தைகளை அழகுபடுத்திப் பார்க்கும் நீங்கள் அவர்களின் தலைமுடியைப் பராமரிப்பதில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

உங்களுடைய தலைமுடிக்கும் குழந்தையின் தலைமுடிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதனால் நிச்சயமாக, உங்களுடைய கூந்தலைப் போன்றே, குழந்தையின் கூந்தலையும் பராமரிக்கக்கூடாது.

குழந்தைகளின் தலைமுடி மிகவும் மென்மையாக இருக்கும். அதனால் கூடுதல் கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.

வாரத்துக்கு மூன்று முறை மட்டும் தலையை அலசிவிடுங்கள். அடிக்கடி தலைமுடியை அலசும்போது, கூந்தல் வறட்சியடைந்துவிடும்.

குழந்தைகளுக்கு தலை சீவும்போது தனி சீப்புகளைப் பயன்படுத்துங்கள். அதனுடைய பற்கள் பெரிதாக, கடினமானதாக இல்லாமல், சிறிய மென்மையான பற்களைக் கொண்டிருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான ஷாம்புகளை மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற ஷாம்புகளில் அதிக அளவிலான கெமிக்கல்கள் இருப்பதால், அவை குழந்தைகளின் கண்ணையும் சேர்த்து பாதிக்கும்.

வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்லும்போது நிச்சயமாக, தொப்பி அல்லர் ஸ்கார்ப் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அவசியம். வெளியில் உள்ள தூசிகள் அதிகம் படியாமல் இருக்கும்.

வாரத்துக்கு இரண்டு முறையாவது ஆயில் மசாஜ் செய்துவிடுங்கள்.
குளித்து முடித்ததும் சீப்பைக் கொண்டு சீவினால், குழந்தைகளுக்கத் தலைவலி உண்டாகும். அதனால், தலைமுடி காய்ந்தபின் சீப்பு பயன்படுத்துவது நல்லது.