நம் முன்னோர்கள் காலத்தில் பிறந்த குழந்தைக்கு தந்தையின் அரவணைப்பு முக்கியமாக கருதப்பட்டதில்லை. அம்மாக்கள் உறவு மட்டுமே பெரிதாக பேசப்பட்டது.
ஆனால் அப்பாக்களின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கண்டிப்பாக தேவை. அம்மாக்களை போல் இல்லாமல் சிறு சிறு விடயங்களை கவனிக்கலாம். டையப்பர் மாற்றுவது, ஆயில் மசாஜ் கொடுப்பது, குழந்தைகளுக்கு உடை அணிவிப்பது, அவர்களை சிரிக்க வைப்பது போன்ற விடயங்கள் கண்டிப்பாக அப்பாக்கள் செய்யலாம்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யும் சிறு சிறு விடயங்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும்.
முதலில் சில மாதங்கள் கடினமாக தான் இருக்கும். வேலை முடிந்து களைப்பாக இருக்கும் நீங்கள் தூங்க நினைப்பீர்கள். ஆனால் இரவு நேரங்களில் குழந்தை எதற்காக அழுகிறது என்பதே தெரியாது. ஆனால் போக போக சரியாகிவிடும்.
குழந்தை பிறந்த பின் ஒரு மூன்று மாதத்திற்கு Postpartum depression ( ஒரு வகையான மன தளர்ச்சி ) அம்மாக்களுக்கு ஏற்படும்.
இதுபோன்ற சமயத்தில் நீங்கள் உங்கள் மனைவிக்கு ஆதரவாக, பாசமாக இருப்பது அவசியம். அதோடு சத்துள்ள உணவுகளை கொடுப்பது மிக மிக அவசியம்.
உங்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் குழந்தை பிறந்த பிறகு அப்படியே மாறிவிடும். ஆனால் நீங்கள் குழந்தைக்கு என்று நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும்.
குழந்தைகளை வளர்ப்பது குறித்து மருத்துவர்கள் நிறைய Workshop நடத்துகிறார்கள். அதில் கலந்து கொண்டு குழந்தையை வளர்ப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதல் குழந்தை உள்ள தந்தைக்கு நிறைய குழப்பம், பயம் என இணைபுரியாத உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் இதுபற்றி எல்லாம் பயப்படாதீர்கள். குழந்தை கொஞ்சம் வளர்ந்து உங்களை அப்பா என்று அழைக்கும் போது இந்த வலிகள் எல்லாம் மறந்துபோய், சந்தோஷம், குதூகலம் என உங்கள் குடும்பம் இருக்கும்.