Home சமையல் குறிப்புகள் குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன்

குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன்

25

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 200 கிராம்
குடை மிளகாய் – 1
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி சாஸ் – 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு – 10 கிராம்
முட்டை – ஒன்று
மைதா மாவு – 50 கிராம்
கார்ன்ஃப்ளார் – 100 கிராம்
வெங்காயத்தாள் – 10 கிராம்
தக்காளி – 1
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும்.

இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, அடித்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன் ரெடி.