பெற்றோர்களாக இருந்தால், குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் தங்கள் கண்களில் தென்படும் உணவுகள் அனைத்தையும் சுவைத்துப் பார்க்க விரும்புவார்கள். குறிப்பாக இனிப்பான தின்பண்டங்கள் என்றால், அவர்களுக்கு கொள்ளை பிரியம். ஆனால அப்படி குழந்தைகள் ஆசைப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தால், அவர்களின் உடல்நலமானது விரைவில் பாழாகிவிடும். அதுமட்டுமின்றி, ஒருசில பெற்றோர்கள் ஆரோக்கியம் என்று நினைத்து வாங்கிக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் கூட தீங்கை விளைவிக்கும். அதிலும் அவை உடலுக்கு மட்டுமின்றி, மனதையும் பாதிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உணவுகள்!!! எனவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருசில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் இறைச்சிகளானது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதனால் பல பெற்றோர்கள் அந்த இறைச்சிகள் சுத்தமாக உள்ளன என்று நினைத்து வாங்கி சென்று குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்கின்றனர். ஆனால் அப்படி பாக்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சிகளில் நைட்ரேட்ஸ் என்னும் இறைச்சி கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு மூளையில் கட்டி, தொண்டை புற்றுநோய் போன்றவை விரைவில் வரக்கூடும்.
குளிர்பானங்கள் சோடா, கோலா போன்றவை கெடுதலை விளைவிப்பவை என்பது தெரியும். ஆனால் தற்போதைய குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒருமுறை அதனை குடிக்காமல் இருப்பதில்லை. ஆனால் அப்படி அதனை அவர்களுக்கு கொடுத்தால், அவர்களது உடல்நிலை விரைவில் பாழாகும். சில நேரங்களில் கடைகளில் விற்கப்படும் டப்பாக்களில் அடைக்கப்படும் பழச்சாறுகள் கூட மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
நூடுல்ஸ் இன்றைய குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் கொள்ளை பிரியம். இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று இதனை அடிக்கடி செய்து கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி, தற்போது நிறைய உணவுப்பொருட்கள் தயாரான நிலையில் பாக்கெட் போட்டு விற்கப்படுகிறது. உதாரணமாக, சூப், தக்காளி தொக்கு போன்றவை. இவை நீண்ட நாட்கள் வருவதற்கு முக்கிய காரணம், அதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் தான். இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களுக்கு ஆஸ்துமா, தலை வலி, சில நேரங்களில் அதிகப்படியான உப்பினால் இரத்த அழுத்தம் கூட வரக்கூடும்.
பாக்கெட் சிப்ஸ் பாக்கெட் சிப்ஸ்களில் எண்ணெய், சோடியம், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறங்கள் சேர்த்திருப்பதால், அதனை குழந்தைகள் அதிகம் உட்கொண்டு வந்தால், அவர்களின் பசியானது அதிகம் தூண்டப்பட்டு, அவர்கள் அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்ள நேரிடும். இதனால் உடல் பருமன் அடையக்கூடும்.
பலவண்ண செரில்கள் பலவண்ணங்கள் கொண்ட செரில்களை குழந்தைகளுக்கு காலை வேளையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், அவர்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கு பதிலாக, செயற்கை கெமிக்கல்கள் கிடைத்து, அவர்களின் உடல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்திவிடும்.