Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் இல்லை என்ற குறையை எவ்வாறு போக்கமுடியும்

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் இல்லை என்ற குறையை எவ்வாறு போக்கமுடியும்

17

1455175224-2421தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.

தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை.

உணவின் மூலமே இயற்கையாக தாய்ப்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

சரியான ஊட்ட சத்துள்ள உணவு பொருள்களை எடுத்து கொண்டால் தாய்ப்பால் ஊறும்.

குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாத கால அவகாசம் குழந்தைக்கு தாய்ப்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒருவாரம், பத்து நாளில் வேலைக்குப் போகவேண்டும் என்றால், தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள்வரை தரலாம்.

தாய்ப்பாலை குளிர்சாதனபெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் வெப்ப நிலைக்கு சரியாக வந்தவுடன் தேக்கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப் படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.