Home சமையல் குறிப்புகள் குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

16

Captureதேவையான பொருட்கள் :

தயிர் – 2 கப்
நறுக்கிய மாம்பழம் – 2 கப்
தேன் – தேவையான அளவு
ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பிஸ்தா – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ – 1 சிட்டிகை
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு

செய்முறை :

* முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஐஸ் கியூப்ஸ், பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!