அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவை உலர்ந்த தலைச் சருமத்தின் காரணமாக வருபவையாக இருக்கலாம். இதுப்போன்ற உலர்ந்த தலைச் சருமம் சில சமயங்களில் சொரியாசிஸ் போன்ற கடுமையான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தீவிரமானதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில பருவ நிலைகளில் ஏற்படக்கூடியது. எனினும் இதுப்போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவையற்றதாகவோ அல்லது சில பருவங்களில் மட்டுமே வரக்கூடியதாகவோ இருப்பின், இவற்றை சில வீட்டு வைத்தியங்களிலேயே குணப்படுத்த முடியும். வறட்சியான தலைச் சருமத்திற்கான அறிகுறிகள் தென்படும் போது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க மற்றும் பொடுகை குணப்படுத்தக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. முதலில் உங்கள் தலையை தண்ணீர் கொண்டு நன்கு அலசி உலர விடுங்கள். அடுத்து ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்துக் கொண்டு ஸ்ப்ரே செய்யக்கூடிய பாட்டிலில்
நிரப்பிக் கொள்ளுங்கள். பின் பஞ்சு உருண்டைகளைக் கொண்டு இந்த கலவையை நேரடியாக தலைச் சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து இயற்கையான அல்லது ஹெர்பல் ஷாம்பு கொண்டு நன்கு சுத்தம் செய்யுங்கள். இந்த வழிமுறையை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், உலர்ந்த தலைச் சரும பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.ஒரு டேபிள் ஸ்பூன் வெஜிடேபிள் ஆயிலில், 2 அல்லது 3 சொட்டு டீ ட்ரீ ஆயிலை விடவும். இந்த கலவையை உள்ளங்கையில் ஊற்றி இருகைகளால் நன்கு தேய்க்கவும். பின்னர் இந்த கலவையை தலைச் சருமத்தில் தேய்க்கவும். இந்த வழிமுறையை தினமும் படுக்கச் செல்லும் முன் செய்து உங்கள் தலைச் சருமத்தினை மேம்படுத்துங்கள்.விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். மேலும் இந்த முறையை நீங்கள் முன்னேற்றத்தை உணரும் வரை தினமும் உபயோகியுங்கள்.இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், மூன்று டேபிள் ஸ்பூன் அளவிலான தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதனை தலையில் தடவி 10 முதல் 15 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் ஒரு மென்மையான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள். இந்த கலவையை தலை அரிப்பு மற்றும் வறட்சி நீங்கும் வரை தினமும் செய்து வாருங்கள்.தேங்காய் எண்ணெயை சிறிது சூடேற்றி அதனை தலையில் நன்கு தேய்க்கவும். குறைந்தது அரை மணி முதல் ஒரு மணிநேரம் வரை நன்கு ஊற விட்டு மென்மையான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள். நல்ல பலன்களுக்கு இந்த எளிய வழிமுறையை வாரத்திற்கு மூன்று முறையாவது செய்யவும்.