Home சமையல் குறிப்புகள் குடைமிளகாய் சாதம்

குடைமிளகாய் சாதம்

26

a1216468-9f9f-4110-b9c6-ba3c1a4d458e_S_secvpfதேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம்-2கப்

கேப்ஸிகம்-1

புளிக்கரைசல்-1/4கப்

மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்

சாம்பார் பவுடர்-2 ஸ்பூன்

ட்ரை தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்

சர்க்கரை-1/2ஸ்பூன்

உப்பு

எண்ணெய்-2ஸ்பூன்

நெய்-1ஸ்பூன்

பட்டை-சிறுதுண்டு

கிராம்பு-1

கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு,முந்திரி-சிறிது

செய்முறை

* கேப்ஸிகமை சதுரத்துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய், நெய் காயவைத்து பட்டை, கிராம்பு

தாளித்து, க.பருப்பு, உ.பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக

வதக்கவும். பின்னர் கேப்ஸிகம் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்.

* கேப்ஸிகம் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசல்,உப்பு,ம.தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

* புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சைவாசம் அடங்கியதும் சாம்பார்தூள்,தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறவும்.தண்ணீர் வற்றியதும் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

* கேப்ஸிகம் ரைஸ் ரெடி! உருளை சிப்ஸ் உடன் பரிமாறலாம். லன்ச் பாக்ஸுக்கு பொருத்தமான உணவு இது.