Home குழந்தை நலம் குடும்பக் கட்டுப்பாடு செய்தபின் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

குடும்பக் கட்டுப்பாடு செய்தபின் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

32

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் பெரும்பாலானோர் பெண்கள் தான். இந்தியாவைப் பொருத்தவரை ஒரு சதவீத அண்கள் கூட குடும்பக் கட்டுப்படு செய்து கொள்வதில்லை. இது ஒருபுறம் இருக்க குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பின் பெண்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உண்டாவதுண்டு.

அவசரப்பட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டபின் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையோ தேவையோ சிலருக்கு நேர்வதுண்டு. அது சாத்தியமா?… அதற்கு என்ன செய்ய வேண்டும்?

குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது.

அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்’ என்று அழைக்கிறார்கள்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது சினை முட்டையை கர்ப்பப்பைக்குள் கொண்டு செல்லும் குழாயைத் துண்டிப்பது தான்.

இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டபின்பும் கூட கருமுட்டைகள் தொடர்ந்து உற்பத்தி ஆகிக்கொண்டே தான் இருக்கும்.

இந்த கரு முட்டைகளை கர்ப்பப்பைக்குள் செலுத்த பல நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் இப்போது வந்துவிட்டன. அதனால் சினைக்குழாய்களை மீண்டும் செயல்படச் செய்கின்ற ஒரு சிறிய அறுவை சிகிச்சையை செய்து கொண்டால் போதும். குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பின்னும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.