Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கால்கள், கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை தரும் பூர்வட்டாசனம்!

கால்கள், கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை தரும் பூர்வட்டாசனம்!

26

standing-leg-exerciseகால்கள், கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை தரும் பூர்வட்டாசனம்!

செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி அமர்ந்து கொள்ளவும். பின்னர் உடலை சற்று பின்புறமாக சாய்த்து கைகளை பின்புறமாக கொண்டு சென்று தரையில் ஊன்றவும். உள்ளங்கை விரல்கள் முதுகை பார்த்தபடி இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக இரண்டு கால்களை முட்டி வரை மடக்கி கைகளை தரையில் ஊன்றி உடலை மேலே தூக்க வேண்டும்.
இப்போது உடல் கைகள், கால்கள் பேலன்சாக இருப்பதை போல் இருக்கும். பின்னர் மெதுவாக கைகளை நகற்றாமல் கால்களை முன்னோக்கி படத்தில் உள்ளபடி ஊன்றவும். உடல் எடை முழுவதும் கால்கள் மற்றும் கைகளுக்கு பேலன்சாக இருக்கும். தலையை நிமிர்த்தியபடி இருக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முறை செய்தால் போதுமானது.
பயன்கள் :
கால்கள், கைகள், தோள்பட்டைகளுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. தொடை பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கிறது.