கால் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் இவ்வாறு செய்வதால் கால்களில் புண் சொறி வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
குளிக்கும் போது மட்டுமன்றி போது கால்களை தினமும் 3.4 தடவை சோப் ‘ போட்டு கழுவுங்கள்
பாதவிரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம்.
கால் விரல் நகங்களை வளர வளர வெட்டி விடுங்கள் கட்டையும் நெட்டையுமாக வெட்டாமல் நகங்களை ஒரே மாதிரியாக வெட்டுங்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை லேசான சூடு நீரில் டிடிசாப் கலக்கி அதில் கால்களை அமிழ்த்தி வையுங்கள்
வாரத்திற்கு ஒருமுறையாவது பாதங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை இளஞ்சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து மசாஜ் செய்தால் பாதங்களிலுள்ள அழுக்குகளை நீக்கலாம்.
பின்பு குதிகாலை தேய்த்து சுத்தப்படுத்தவும். இதன் முலம் பாதங்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுக்காக்கலாம். நல்ல தரமான செருப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
கால் பாதங்களில் பித்த வெடிப்பை அகற்ற வெந்நீரில் சிறிது அளவு ஷாம்பை கலந்து அரைமணி நேரம் காலை அதில் ஊற வைத்து கல்லில் தேய்த்தால் ஒரு மாதத்தில் வெடிப்புகள் மறைந்து விடும்.
பாதங்களில் வாஸ்லின் க்யூட்டிகல் க்ரீம் பாராபின் எண்ணெய் பெட்ரோலியம் ஜெல்லி ஆகிய அனைத்தையும் தடவ வேண்டும்.
வெடிப்பு உள்ளவர்கள் மொசைக் தரையில் காலணிகளுடன் நடப்பதுநல்லது.
இரவு நேரங்களில் தேங்காய் எண்ணெய் தடவலாம். நகங்களில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க ஆலிவ் ஆயில் வைட்டமின் ஈ ஆயில் தடவ வேண்டும்.
வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி தூள் அல்லது மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 2 அல்லது 3 நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.
கல் உப்பு, இடித்த மிளகு இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.
இதுதவிர, பாதங்களிலிருக்கும் இறந்த செல்களும் அழியும். இதன் மூலம் பாதங்களிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க முடியும்.
இது தவிர, ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது. மசாஜ் செய்யும் போது, நீரில் கலக்கப்படும் மாய்ச்சரைசர்களால் பாதம் மிகவும் மிருதுவாகும்.
பாதத்திற்கு மசாஜ் செய்யும் போது, மனதிற்கு மிகவும் ரிலாக்சாக இருக்கும்