கால் துர்நாற்றமடிப்பதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன.
தேநீர் பைகள் சிலவற்றை சூடான நீரில் போட்டு, காலை ஊர வைத்தால் கால் துர்நாற்றத்தை போக்க முடியும்.
மேலும் நீருடன் வினிகரைக் கலந்து, அதில் பாதத்தை ஊர வைத்தாலும், கால் துற்நாற்றத்தை அகற்ற முடியும். இதை தவிர பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சோப்புகளாலும் நல்ல தீர்வு கிடைக்கும். ஷூக்களுக்கு உள்ளே நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்திருந்தாலும் துற்நாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பாக்டீரியாவானது ஈரத்தில் வளர்வதால், கால் ஈரத்துடன் இருக்கும் பொழுது, அவை வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இத்தகைய துர்நாற்றத்தை வியர்வை சுரப்பிகள் தான் வளர்க்கின்றது. இந்த பாக்டீரியா மூலம் சுரக்கும் ஐசோவலீரிக் (isovaleric) அமிலம் கெட்ட வாசனையை ஏற்படுத்துகின்றன.
அதிலும் இவைகளை சுத்தம் செய்யும் போது, சமையல் சோடா சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிறிய தொட்டியில் சூடான நீரை ஓரளவு நிரப்பி, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, சில மணி நேரம் கால்களை அதனுள் வைத்திருக்க வேண்டும்.
இத்தகைய கால் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டிலேயே சில மருத்துவ முறைகளை உள்ளன. காலணிகளை சுத்தமாக வைத்திருந்தால் நாற்றத்தை போக்க முடியும். வழக்கமாக துணியை சுத்தம் செய்வது போல் சாக்ஸையும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் செருப்புகளையும், ஷூக்களையும் வெயிலில் காய வைக்க வேண்டும்.
நிரந்தரமாக கால் துர்நாற்றத்தை அகற்ற இருக்கும் பயனுள்ள வழிகளில் ஒன்று தான், சாதம் வடித்த நீரில் காலை ஊற வைத்தல். அதிலும் அந்த நீரில் அரை மணி நேரம் காலை ஊற வைத்தால், நல்ல பலனைப் பெற முடியும்.
இது எளிதில் கால் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. கால்களை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பாக்டீரியாவை எதிர்க்கும் சோப்பு மற்றும் சூடான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறை கெட்ட நாற்றம் உருவாகாமல் பாதுகாத்து, பாக்டீரியாவை அழித்துவிடும்.
கால்களை அதிகமாக வியர்வை தாக்குகின்றது என்றால், உப்பைப் பயன்படுத்தி வாசனையை அகற்ற முடியும். அதற்கு ஒரு அகன்ற வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் சிறிது உப்பு போட்டு நன்கு கலந்து, அந்த நீரில் சிறிது நேரம் கால்களை ஊற வைத்தால், கால்களில் இருக்கும் துர்நாற்றம் ஓடி விடும்