இந்த கால இளைஞர்கள் வேலையை காரணம் காட்டி உடற்பயிற்சி செய்யாமல் தவிர்க்கிறார்கள். இதனால் பிற்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதில்லை.
தற்போதுள்ள காலகட்டத்தில் வேலைமுறையை மாற்ற முடியாத சூழலில், குறைந்தபட்சம் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரமான சூழலில் நல்ல காற்றை சுவாசித்து, தளர்வான உடைகள் அணிந்து அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாலையில் கூடுதலாக வேண்டுமானால் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். அதற்காக, காலை உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. மாலை உடற்பயிற்சியில் அன்றைய தினம் சாப்பிட்ட கலோரிகளைதான் எரிப்போம். ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு காலை வேளை உடற்பயிற்சியே சிறந்தது. முக்கியமாக, அடைத்துவைக்கப்பட்ட அறைக்குள், பலருடன் கூட்டாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் 30 நிமிடம் காலை, மாலை இருவேளை உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் ஆரோக்கியத்தைதரும். இருவேளை செய்ய முடியாதவர்கள் காலை மட்டும் செய்யலாம். வேலை காரணமாக காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் மாலையில் செய்யலாம்.
வாரம் முழுவதும் பயிற்சி செய்ய முடியாதவர்கள் வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்யலாம்.