Home உறவு-காதல் காதலியை காக்க வைக்காதீங்க!!!

காதலியை காக்க வைக்காதீங்க!!!

32

greenland-happy-hug-kiss-love-Favim.com-321340பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பது என்பது பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்பதை வெறுக்கிறார்கள். ஏனெனில் அவ்வாறு காத்திருப்பது அவர்களை அவமதிப்பது போல் நினைப்பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நேரத்தை கடைபிடிப்பார்கள் என்று அவர்கள் மனதில் பதிந்துள்ளதே முக்கிய காரணம். சில சமயம் தாமதமாக வந்தால் பெண்கள் அனுசரித்து இருப்பர். அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில ஆண்கள் தாமதமாக வருவதையே பழக்கமாக கொண்டிருப்பர். அவ்வாறு நடப்பதால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு காக்க வைத்து தாமதமாக வந்தால் என்ன ஏற்படும் என்றும் எவ்வாறு அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்றும் அனுபவசாலிகள் கூறுவதை தெரிந்து கொள்ளுங்களேன்…

எப்போதுமே பெண்களை காக்க வைத்து தாமதமாக அவர்களை காணச் செல்லும் போது, அவர்கள் படும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த அவர்களுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் காத்திருந்ததால் மிகவும் வருத்தத்துடன் கோபமாகவே இருப்பர். அப்போது அவர்களுக்கு ஒரு சிறிய சந்தோஷப்படக்கூடியவாறு ஏதேனும் வாங்கி கொடுக்கலாம் அல்லது அனைத்து பெண்களுக்கும் பிடித்த டெடி பியர் வாங்கி கொடுக்கலாம். இல்லை அவர்கள் கோபம் போகவே இல்லையென்றால், அப்போது அவர்கள் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட ஏதேனும் ஒன்றை செய்தோ அல்லது கொடுத்தோ அவர்களை குளிர்விக்கலாம். ஒண்ணும் முடியாட்டி ஒரு முத்தமாச்சும் கொடுங்க.

காதலியை நீண்ட நேரம் காக்க வைத்தால், நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் அழகான, நல்ல குணம் உள்ள ஆண்களையே தேர்ந்தெடுத்து காதலிப்பர். அவ்வாறு ஆசைப்பட்டு காதலிக்கும் காதலன் முதலில் நன்கு நேரத்தை கடைபிடித்தவர், போக போக காக்க வைத்துக்கொண்டே இருந்தால், பின் அவளை வேறு ஒருவன் தூக்கி சென்றுவிடுவான். ஆகவே எப்போதுமே அவ்வாறு தாமதமாக வராமல், காதலியை பார்க்க போகும் சமயம் ஏதேனும் வேலை வந்து தாமதமாகும் என்று தெரிந்தால், உடனே காதலிக்கு போன் செய்து தகவலை தெரிவித்துவிடுங்கள். இதனால் அவர்கள் எந்த கோபமும் படாமல் சந்தோஷமாக இருப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும் அவர்கள் மனதில் தோன்றி, காதல் அதிகரிக்கும்.

சிலசமயம் காதலியை/மனைவியை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டால், அவர்களும் ஒரு நாள் உங்களை காக்க வைப்பார்கள். உதாரணமாக, உங்கள் காதலியை ஒரு 1/2 மணிநேரம் காக்க வைக்க நேர்ந்தால், அவள் மறுநாள் உங்களை காண வரும் போதோ அல்லது எங்கேனும் செல்லும் போதோ, 1 மணிநேரம் காக்க வைப்பாள். இவ்வாறு இருந்தால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

மேலும் அவர்கள் காத்திருப்பதால், அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துவிடும். மேலும் இது உறவுகளுக்குள் ஒரு கெட்ட எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே நேரத்தை சரியாக கடைபிடித்து உங்கள் மேல் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.

ஆகவே தாமதமாக காதலியையோ அல்லது மனைவியையோ சந்திக்க செல்லும் போது, அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கி கொண்டு செல்லுங்கள், இது எந்த பிரச்சனையையும் வராமல் தடுக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.