Home சூடான செய்திகள் கல்யாணமாகி புருசன் வீட்டுக்கு போக போறீங்களா? இத படியுங்களேன்.

கல்யாணமாகி புருசன் வீட்டுக்கு போக போறீங்களா? இத படியுங்களேன்.

25

எப்போது திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்கிறோமோ, அப்போது புகுந்த வீட்டில் நிறைய பேரை சமாளிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு அவர்களை கஷ்டப்பட்டு சமாளிப்பதற்கு, அவர்களுக்கு உங்களை பிடிக்கும் வகையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருந்தால், அவர்கள் அனைவரையும் எளிதில் அன்பால் வெல்ல முடியும்.
ஏன் நீங்களே அவர்களது செல்லமாக கூட மாற முடியும். மேலும் எப்படி புதிதாக ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களை ஏற்பது சற்று கடினமோ, அப்படி தான், நீங்கள் செல்லும் வீட்டில் இருப்பவர்களும் உங்களை ஏற்க சற்று நாட்கள் ஆகும். ஆகவே அவர்களுக்கு உங்களை விரைவில் பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவ்வாறு நடந்து உங்கள் புகுந்த வீட்டில் இருப்போரின் செல்லமாக மாறுங்கள்.

* திருமணம் ஆவதற்கு முன்பு அவர்களை சந்திக்க வேண்டும். அவ்வாறு சந்திக்கும் போது சற்று அழகாக, குடும்பப் பாங்கான பெண்ணைப் போல் அழகாக சேலையை அணிந்து, அவர்களை சந்தித்து பேச வேண்டும். மேலும் பேசும் போது, நன்கு கலகலப்போடு, அன்போடு பேச வேண்டும். அதிலும் சந்திக்கச் செல்லும் முன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ரிகர்சல் செய்து கொண்டு செல்வது நல்லது.

* மாமனார், மாமியார் நிறைய அனுபவம் உள்ளவர்கள். ஆகவே திருமணம் ஆனப் பின்பு, அவர்கள் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்பதை புரிந்து நடந்து கொண்டால் நல்லது. அதிலும் அவர்கள் பழங்காலத்தவர். எனவே அவர்கள் என்ன சொன்னாலும், அது உங்களுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அதற்காக அவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், பொறுமையாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் நடந்து வந்தால், நீங்கள் நிச்சயம் அவர்களுக்கு ஒரு செல்லமாக மாறலாம்.

* புகுந்த வீட்டிற்கு சென்றால், அங்கு மாமனார், மாமியார் தான் அம்மா, அப்பா போன்று. எப்படி அம்மா, அப்பாவிடம் இருப்போமோ, அந்தவாறே அவர்களிடம் நடக்க வேண்டும். வாழ்க்கை என்றால் நிறைய புதிய மனிதர்களை சந்திக்க நேரிடும். ஆகவே அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். இல்லை முடியாது என்று இருந்தால், ஒருபோதும் அவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போய்விடும். மேலும் இதனாலேயே பெரும்பாலான வீடுகளில் மாமியார், மருமகள் சண்டைகள் ஏற்படுகின்றன. ஆகவே இந்த பிரச்சனையை தவிர்க்க, அவர்களை தன் அம்மா, அப்பா போன்று நினைத்து பழக வேண்டும்.

* கணவர் வீட்டிற்கு சென்றால், அங்கு இருப்பவர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். சரி, உங்களுக்கு உங்களது அப்பாவின் பிறந்தநாள் வந்தால், என்ன செய்யலாம் என்று யோசித்து, எவ்வாறு ஒரு அதிர்ச்சி கொடுப்போம். அதேப்போல் தான் திருமணத்திற்கு முன் மாமனார், மாமியாரை சந்திக்கும் போது, அவர்களிடம் அவர்களது பிறந்தநாள், திருமண நாள், பிடித்தது, பிடிக்காதது என்பவற்றை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கும் ஒரு அதிர்ச்சி கொடுத்தால், அவர்கள் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போய்விடுவதோடு, அன்று முதல் நீங்களே அவர்களது மகனை விட செல்லமாகிவிடுவீர்கள்.

* எப்போது உங்கள் மாமியார், மாமனார் உங்களை அழைத்தாலும், அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கும் வகையில் சென்று என்ன வேண்டும் என்பதை கேட்டு, அதை செய்ய வேண்டும். உதாரணமாக, மாமியார் சமையறையில் இருக்கும் போது, அவர்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்வது, மாமனார் தோட்டத்தில் வாக்கிங் செல்லும் போது அவருடன் செல்வது போன்றவற்றை செய்தால், உங்கள் மீது அன்பு அதிகரிக்கும்.