பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள்.
இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக
நீண்ட நாட்கள் இருக்குமோ, அதேபோல் குழந்தைக்கு உருவாகும் உறுப்புக்கள் அடிப்படையிலேயே ஆரோக்கியமாக இருந்தால்தான்,
குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும்.
அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் குழந்தைக்கு சில முக்கிய உறுப்புக்களும், வடிவமும் கிடைக்கும். ஆகவே
இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை நன்கு கேட்கலாம். இதயம்
இக்காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், குழந்தை இதய பிரச்சனையுடன்
பிறக்கக்கூடும்.
மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு
மூன்று மாத காலத்திலும் இம்மூளையானது வளர்ச்சியடையும். இருப்பினும், கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் கவனமாக இருக்க வேண்டியது
அவசியம்.
சில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை
தவறாமல் பிரசவம் நடைபெறும்வரை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் மலச்சிக்கல் இருந்தால், அதனாலேயே பல்வேறு
பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி சில பெண்கள் முதல் மூன்று காலத்தில் வாந்தி, மயக்கம், கடுமையான சோர்வை
உணர்வார்கள். ஆகவே அதற்கேற்ற உணவை தவறாமல் எடுத்து வருவது, சற்று ஆறுதலாக இருக்கும்.
குறிப்பு : முதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களையும்,
பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள்தான் காணரம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில்
மார்பகங்களின் அளவு அதிகரிப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.