கர்ப்பிணிகள் அமைதியான சூழலில் வசிக்கவேண்டும். அவர்களின் மனதில் எந்த வித துன்பகரமான நினைவுகள் இருக்கக் கூடாது என்றுதான் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவார்கள். இதனால் குழந்தைகள் எந்த வித பாதிப்பும் இன்றி அமைதியாக கருவினுள் வளர்ச்சியடையும். முகத்தையோ, உடலையோ ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு படுத்த நினைக்கக் கூடாது இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் மன அமைதி தரும் பேஷியல் செய்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மன அமைதி முக்கியம்
கர்ப்பகாலத்தில் பேஷியல் செய்து கொள்ளலாமா என்பது பெரும்பாலோனோரின் கேள்வியாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தேவையான மன அமைதி எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
கண்டதை நினைக்காதீங்க
பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான். எனவே பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது இதனால் எந்த பயனும் இல்லை. எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே மன அமைதியை அடைவோம். ரத்த ஓட்டம் சீராகி மனம் அமைதியடைவதால் உடலுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் நிச்சயம் நல்ல பலனை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆக்ஸிஜன் பேஷியல்
ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற வரிகளும், சுருக்கங்களும் நீங்கும். ஹைடிராக்டிங் பேஷியல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தினை தக்கவைக்கிறது. அதேசமயம் முகப்பரு உள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே பேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்யக்கூடாதாவை
அரோமா தெரபி, ரசாயனங்கள் பயன்படுத்தி பேஷியல், சூடான கற்கள், ஆழமான கிளன்சிங், மின்னணு பொருட்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்யக்கூடாது.