Home ஜல்சா கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?

39

எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும்.

இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation)என்று பெயர். இவ்வாறு கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும்.

அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.