Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் வாய் வழி உறவில் ஈடுபட கூடாது.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!!!

கர்ப்ப காலத்தில் வாய் வழி உறவில் ஈடுபட கூடாது.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!!!

106

கர்ப்பகாலத்தில் ஏற்படும் பால்வினை தொற்று பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தில் அபாயத்தை ஏற்படுத்தும்.

கோனோரியா மற்றும் கிளமிடியா இரண்டும் கருகலைப்பு உண்டாக காரணமாக அமையலாம்.

மூன்றாம் மூன்று மாத சுழற்சிக் காலத்தில் பிறப்புறுப்பு ஹெர்பெஸ் ஏற்படுவது, 50% குழந்தைக்கும் தொற்றும் வாய்ப்பிருக்கிறது.

ஆணுறை பயன்படுத்தினாலும் பால்வினை தொற்று உண்டாக வாய்ப்புகள் உண்டு.

சமீபத்திய ஆய்விற்கு பிறகு மருத்துவ நிபுணர்கள் கர்ப்பகாலத்தில் ஓரல் செக்ஸ் தவிர்க்க வேண்டும் என அதன் அபாயங்கள் பற்றி கூறி அறிவுரைத்திருக்கின்றனர்.

எஸ்.டி.ஐ எனப்படும் பால்வினை தொற்றுகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் பட்சத்தில் அது பிறக்க போகும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அபயாமாக அமையலாம், அந்த தொற்று குழந்தையையும் அண்டலாம் என எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கருகலைப்பு!
பால்வினை நோய் தொற்றுகள் பலவன இருக்கின்றன. அவற்றில் கோனோரியா மற்றும் கிளமிடியா எனும் பால்வினை தொற்று கர்ப்பகாலத்தில் உண்டானால், இதன் காரணமாக கருகலைப்பு உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிலும் முக்கியமாக மூன்றாவது மூன்று மாத சுழற்சி காலத்தில் இது நடக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிறப்புறுப்பு ஹெர்ப்ஸ்!
மற்றொரு பால்வினை தொற்று வகையான பிறப்புறுப்பு ஹெர்ப்ஸ் கர்ப்பகாலத்தில் கர்பிணிக்கு தொற்றினால் அது பிறக்கவிருக்கும் குழந்தையிடமும் தொற்ற 50% வரை வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த ஹெர்ப்ஸ் தொற்று, கர்ப்பிணிகளுக்கு மூன்றாவது மூன்று மாத சுழற்சி காலத்தில் தான் அதிகம் தொற்றுகிறது. இதனால் பிறக்கப் போகும் குழந்தையிடமும் பாதிப்புகள் ஏற்படலாம்.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகம்!
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பீட்டர் லியோன் என்பவர் தனது சமீபத்திய உரையில் கர்ப்பகாலத்தில் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வதால் உண்டாகும் பிரச்சனைகள், தாக்கங்கள் பற்றி கூறியுள்ளார். ஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி செக்ஸில் அதிக ஈடுபாடு காட்டும் நபர்கள், இதை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால், கர்ப்பகாலத்தில் அந்த பெண்ணின் நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் தாக்கங்கள் உண்டாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

சிசேரியன்!
இந்த தாக்கங்கள் சுகபிரசவம் ஆகும் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளிடம் குறைவாக இருக்கிறது என்றும் கிரீன்வோல்ட் எனும் நிபுணர் கூறியுள்ளார். தாயின் பிறப்புறுப்பு வாயிலாக பிறக்கும் போது குழந்தைக்கு ஹெர்ப்ஸ் தொற்று தொற்ற வாய்ப்புகள் அதிகரிக்கிறது, என தனது சமீபத்திய பேட்டியில் இவர் தெரிவித்துள்ளார்.

ஆணுறை!
ஆணுறை அணிந்து இது போன்ற உறவில் ஈடுபட்டாலும் கூட பால்வினை நோய் தொற்று உண்டாக வாய்ப்புகள் உண்டு. எச்.பி.வி, ஹெர்ப்ஸ், சைபில்ஸ், பப்ளிக் லைஸ் போன்ற தொற்றுகள் ஆணுறை உபயோகப்படுத்தினாலும் தொற்றலாம்.

மார்னிங் சிக்னஸ் (Morning Sickness)
மார்னிங் சிக்னஸ் எனப்படுவது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலையில் உடல்நலம் முடியாமல் போகும் ஒன்று, இது இயல்பு. அல்பானி பல்கலைகழக மருத்துவர் ஓரல் செக்ஸ் மூலம் இதை தவிர்க்க முடியும் என கூறியுள்ளார். ஆயினும், கர்ப்பகாலத்தில் முழுமையாக ஓரல் செக்ஸ் தவிர்க்க வேண்டும், ஏனெனில், இதன் மூலம் பால்வினை தொற்று ஏற்படுவது, பிறக்கவிருக்கும் குழந்தையின் நலனை பாதிக்கும் என்பதை மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.