இன்றைய காலக்கட்டத்தில் தாயும், தந்தையும் தங்கள் குழந்தை எப்பொழுது பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். எனவே, இவர்கள் குழந்தைப் பெற வேண்டும் என்ற காலத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே,
மருத்துவ ஆலோசனைப் பெற்று தங்கள் உடலை மிகவும் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்வது அவர்கள் குழந்தைக்கு அவர்கள் கொடுக்கும் முதல் சொத்து. கர்ப்ப காலத்தில் நல்ல உணவு, சரியான அளவில் உண்பது என்பவை ஆரோக்கியமான குழந்தையினைப் பெற வழி வகுக்கின்றது.
கர்ப்ப காலத்திற்கு முன்பே, அதிக எடையுடைய பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கிலோ வரை மட்டுமே எடை கூடுவது நல்லது. கர்ப்ப காலத்திற்கு முன்பே எடை குறைவாய் உடைய பெண்கள், கர்ப்ப காலத்தில் 12 முதல் 18 கிலோ வரையிலான எடை கூடலாம். கர்ப்ப காலத்திற்கு முன்பு சரியான அளவு உடைய பெண்கள் 11 முதல் 16 கிலோ வரை எடை கூடலாம்.
இவை அனைத்துமே அவரவர் மருத்துவர் அறிவுரைப்படி நடைபெற வேண்டும். நல்ல குழந்தையைப் பெற வேண்டும் என்பதால், குழந்தையின் வளர்ச்சியினை கண்காணித்துக் கொள்வது நல்லதே. தடுப்பு மருந்துகளை அவரவர் உடல்நிலைக்கேற்ப மருத்துவர் முடிவு செய்வார்.