Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் அவசியமான ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்

கர்ப்ப காலத்தில் அவசியமான ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்

31

இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு விட்டமின் – பி குறைவாக உள்ளது. இதனால் ரத்த சோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்சனைகளும் உருவாகின்றன. கரு உண்டாவதில் பிரச்சனை, கரு தங்கலில் பிரச்சனை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பெண்கள் பலர் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே, மருத்துவர்கள் விட்டமின் – பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.

கர்‌ப்பகால‌த்‌தி‌ல் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், கருவின் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் ஹீமோகுளோபின் அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம், குழந்தையின் `டிஎன்ஏ’ வளர்ச்சிக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமானது.

‘உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிலிருக்கும் பெண் எனில், திருமண நாளில் இருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கலாம். மருத்துவ ஆலோசனையுடன் திருமணத்துக்கு 3 மாதங்கள் முன்பிருந்தேகூட எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகள் விட்டமின் – பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் உடலுக்குப் போதாது என்பதால், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.