Home இரகசியகேள்வி-பதில் கர்ப்ப காலத்தின் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள்

கர்ப்ப காலத்தின் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள்

14

இப்போது நாம் அறியப்போகும் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள் சாதாரணமாக எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இளம் ஜோடிகள் பொதுவாகக் கேட்கக் கூடியதாம்.
கர்ப்ப காலத்தின் எந்தக் காலகட்டத்திலும் ஏதேனும் செக்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ளப்பட முடியாத கருத்து வேறுபாடு இருந்தாலோ, உங்கள் மருத்துவரை கேட்கத் தயங்காதீர்கள். நீங்கள் கேட்கப்போகும் எதுவும் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்காது என்பதை உறுதியாக நம்புங்கள்.
விவாதம் தெளிவற்றதோ அல்லது மிகவும் அபத்தமாக இருக்குமோ என எண்ணாது, அதே போன்ற பிரச்சினைகள் மற்றவர்களுக்கும் இருந்திருக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள்.
சாதாரணமாக, எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய கணவர்கள் கேட்கக்கூடிய கேள்விகள் என்னென்னவா இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

எனக்கு உடலுறவு கொள்வதில் அவசியமான தேவை இருக்கிறது. ஆனால் கர்ப்பமாயிருப்பதால் என் மனைவிக்கு அதில் ஆர்வம் இல்லை. இது எங்கள் இருவருக்கும் ஒரு மன இறுக்கத்தை, அதாவது டென்ஷனை உருவாக்குகிறது. இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்?
இது விஷயமாக உங்கள் மனைவியிடம் நீங்கள் பேசி உடலுறவு கொள்வதை அடிக்கடி இல்லாமல் எப்போதாவது ஒரு முறையோ அல்லது உடலுறவில் அவளின் பங்கு மிகவும் குறைந்ததாகவே இருக்கக்கூடிய மாற்றுமுறையைப் பின்பற்றலாம் எனச் சொல்லலாம். பெண்கள் அவர்களுக்குத் தேவையில்லை என நினைக்கும்போது அவர்களுக்கு உடலுறவில் ஆர்வமேற்படச் செய்வதென்பது சில நேரங்களில் கடினமானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் வயிறு வீக்கமாயிருந்தாலும் அவர்கள் மிகவும் அழகாயிருப்பதாயும் அவர்களை நீங்கள் நிறைய நேசிப்பதாயும் மீண்டும் மீண்டும் உறுதியளிப்பது உதவும்.
நாங்கள் அந்தரங்கமாகக் காதல் கொள்ளும்போது நான் குழந்தை வயிற்றில் அசைவதை உணர்ந்தால், அது என்னுடைய செக்ஸ் ஆர்வத்திற்கு ஒரு முடிவினை அளிப்பதாக உணருகிறேனே?
நீங்கள் உங்களையறியாமலேயே உங்கள் குழந்தைக்குத் தீங்கு ஏற்படுத்திவிடுவோம் எனும் கவலை உணர்வு கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல ஒருபோதும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல கரு நல்லதொரு பாதுகாப்போடு இருக்கும். அதனுடைய உதைகளும், திருப்பங்களம் உங்களின் உடலுறவு நடவடிக்கைகளுக்கு எவ்வித சம்பந்தமும் கொண்டிருக்காது. இருந்தாலும் நீங்கள் மிகவும் கவலைப்பட்டால் குழந்தையை உணரமுடியாத வேறொரு நிலையில் முயற்சி செய்யுங்கள்.
சாதாரணமாக கர்ப்பிணித் தாய்மார்களின் மனதில் எழக்கூடிய கேள்விகள் என்னவாக இருக்கும் என்பதையும் அறிந்துகொள்வோம்.

உடலுறவுக்கான என்னுடைய விருப்பம் கர்பப காலத்தில் குறையுமா?
அதிகபட்சமான பெண்களிடம், கர்ப்ப காலம் அவர்களின் செக்ஸ் விஷய ஆர்வத்தின் மீது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், இரண்டு கர்ப்பிணித் தாய்மாரை எடுத்துக்கொண்டால், அவர்கள் ஒரே மாதிரியான கருத்தினைச் சொல்லமாட்டார்கள். கருத்தடை சாதனங்களை உபயோகிக்கும் பெண்களுக்கு ஒரு தடையாகவோ அல்லது மனதளவில் தடங்கலாகவோ இருக்கும் பட்சத்தில், கர்ப்ப காலம் என்பது தடையற்ற, கவலையற்ற, பயமற்ற உடலுறவு காலமாயிருக்கும். சில நேரங்களில் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்களின் உருவத்தையும், அழகையும் இழப்பதாக உணருவர். அவர்கள் மோகம் அடைவதை வெட்கப்பட்டுத் தவிர்ப்பர் அல்லது அடிக்கடி உடலுறவு கொள்வதை விரும்புவர். ஏனெனில், அவர்களின் கணவர்கள் இன்னும் அவர்களை விரும்புவார்கள் என்றும் நம்புவார்கள். சில சமயங்களில், ஒரு சில பெண்கள் உடலுறவுக்குக் கர்ப்ப காலம் முழுக்க முழுமையான ஈடுபாடு இல்லாமல் இருப்பர். இது அவர்களின் மனத்தில் வெளிப்படையாகவோ அல்லது உள்ளாந்திரமாகவோ உடலுறவு கொள்வது கருவைப் பாதிக்கும் எனும் எண்ணம் இருப்பதால் இருக்கும். இந்த எண்ணம் குழந்தை பிறந்தவுடன் மறைந்துவிடும்.

மிகவும் உணர்வுபூர்வமான வேகமான உடலுறவு, குழந்தையை பாதிக்குமா?
கர்ப்பப் பையில் இருக்கும் கருவை உடலுறவு பாதிப்பது இயலாத ஒன்று. கருவை அது மிதக்கும் பனிக்குட நீர் (ஆம்னியாடிக் திரவம்) தசைகளாலான வயிறு, இடுப்பு எலும்பு போன்றவை பாதுகாத்துவிடும்.

கர்ப்ப காலத்தில் சந்தோஷ உணர்ச்சியின் உச்சாணிக்குப் போவது கெடுதலா?
இல்லவே இல்லை. இது மற்ற நேரங்களைப்போல நன்மை பயக்கக்கூடியதே ஆகும். அவ்வாறு சந்தோஷ உணர்ச்சியின் உச்சாணிக்குச் செல்வது குழந்தைக்கு எவ்வித வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.

கர்ப்ப காலத்தில் எவ்வளவு காலகட்டத்திற்கு ஒருமுறை உடலுறவு கொள்வது பாதுகாப்பானது?
ஒரு சரியான இடைவெளியோ, பாதுகாப்பான இடைவெளியோ ஏதுமில்லை. இடைவெளி ஜோடிக்கு ஜோடி மாறுபடும். ஒரே ஜோடியிடமும், மாதத்திற்கு மாதம் மாறுபடும். சில கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பமான முதல் மூன்று மாதத்திற்கு அவ்வளவு ஆவலாயிருக்கமாட்டார்கள். இதற்கு அந்தக் காலகட்டத்தில் உடலில் இருக்கும் சோர்வு ஒரு காரணமாய் இருக்கும். ஆனால், நான்காவது மாதத்திலிருந்து அவர்களின் சக்தியை மீண்டும் பெற்று விடுவதால், உடலுறவில் புதிய ஈடுபாடு உடையவர்களாய் ஓர் அனுபவத்தை அடிக்கடி உணருவர்.

கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பகாலத்தின் எந்தவொரு கட்டத்திலும் உடலுறவு கொள்ளலாமா?
பொதுவாக, கர்ப்பகாலத்தில் கடைசி சில வாரங்களைத் தவிர்த்து உடலுறவு கொள்வதை அனுமதிக்கலாம். அந்தக் கடைசி சில வாரங்களில் உடலுறவு கொண்டால் சில சமயம் ஜவ்வுகள் உடையும் காலத்திற்கு முன்பாகவே உடைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.
பனிக்குடம் உடைந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தாலோ,
பிறப்புறுப்பிலிருந்து இரத்தப்போக்கோ அல்லது கசிவுடன் கூடிய அரிப்பு இருந்தாலோ,
பிறப்புறுப்பிலோ அல்லது வயிற்றுப் பகுதியிலோ, வலி இருந்தாலோ உடலுறவைத் தவிர்த்துவிடுவது அவசியம்.

கருச்சிதைவு ஏற்கெனவே ஏற்பட்டு இருப்பவர்கள் கர்ப்பமானால், உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டுமா?
முதல் மூன்று மாதங்கள் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல் ஒரு சம்பிரதாயமாகக் கொள்வது நல்லது. மேலாம், இத்தகையவர்கள் இந்த முதல் மூன்று மாதக்ளில் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதையோ அல்லது கரடுமுரடான பாதையில் கார்களிலோ அல்லது ஆட்டோவிலோ பயணிப்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில், இச்செயல்கள் நஞ்சுக் கொடி நன்கு வளர்ச்சியுறுவதற்கு நல்ல வாய்ப்பினை அளிக்கும். அதனால், கர்ப்பப்பைக்க ஏதேனும் நலிவு ஏற்பட்டாலும் இரத்தப்போக்கையோ அல்லது பிடிப்பினையோ ஏற்படுத்தாது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலுறவின்போது ஏற்படும் அழுத்தத்தால் மிகவும் சிரமமாய் இருப்பதாய் புகார் செய்வார்கள். ஆனால், வலி இருக்காது. இது எதனால்?
கணவரின் உடல் எடை அவர்களின் மீது படுவதால் அந்த சிரமம் இருக்கும். இதை, படுக்கும் நிலையினை மாற்றுவதன் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளுக்கு மிகவும் அழுதமாய் உணர்ந்தால், ஆழமான உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். படுக்கும் நிலையை மாற்றுதல் அல்லது தலையணையை உபயோகித்தல் போன்றவை உதவும். அதோடு பிறப்புறுப்பில் தடவக்கூடிய கிரீம் அல்லது ஜெல்லி போன்றவை அதிக உராய்வை உண்டு செய்யாமல் பிறப்புறுப்பின் சிரமத்திலிருந்து விடுதலை அளிக்கும்.
கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களின் கணவன்மார்களிடம் எப்படி அவர்கள் உணருகிறார்களோ அதைச் சொல்லக் கஷ்டமாக உணருவார்கள். அவர்களே, தாங்கள் அசிங்கமாகவும் மேலும் அரவணைப்புக்கு உரியவர்களல்லாததுபோலவும் உணருவார்கள். கணவர்கள் மற்றபடி அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையென்றாலும் மேற்கொண்டு அதிகமாக அணைத்துக் கொள்வதில்லையே?
சில சந்தர்ப்பங்களில் ஒரு சில ஆண்கள் அவர்கள் மனைவிமார்கள் கர்ப்பமாய் இருக்கும்போது ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அது தற்காலிகமானதே. மேலும், அதைத் தவிர்த்தல் என்று எண்ணக்கூடாது. மற்றபடி, பெண்களின் உடல் மாற்றங்களைப் பார்த்து அவர்களின் கணவர்கள் ஒதுக்கமாட்டார்கள். ஏனெனில், இந்தக் காலகட்டத்தில்தான் அவர்களின் மனைவிமார்கள் மிகவும் அழகாய் இருப்பதாய்க் காணுவார்கள். அவர்களின் உள்மனதிலே கவலைகளும், தந்தையாகப் போகிறோம் எனும் உணர்வும் ஒரு கலப்படமான உணர்ச்சிகளை ஏற்படுத்துவதால் அவர்கள் வித்தியாசமாகக் காணப்படுவர். ஆகவே, இந்தக் காலகட்டங்களில் கணவனும் மனைவியும் மனம்விட்டு அதிகமாகப் பேசவேண்டும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணித் தாய் உடலுறவால் மிகவும் சோர்ந்து விடுவதாய் உணர்ந்தால் மீண்டும் உடலுறவு கொள்ளலாமா?
கர்ப்பிணித்தாய் மிகவும் சோர்வாய் உணர்ந்தாலோ, உடலுறவில் ஆர்வமில்லாது இருந்தாலோ அப்பெண்ணிடம் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.