கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து ம் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மீன்கள்: ஆற்று மீன்களையோ குளத்து மீன்களையோ அல்லது ஐஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்க ளை யோ சாப்பிடக்கூடாது. கர்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கர்பநேரத்தில் அவர்களது உடலில் இருக்கவே ண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.
அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உண வுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப்படுவதால், கருச் சிதை வும் ஏற்படும் அபாயம் உண்டு.
துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உண்வு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள் ள பால் பொரு ட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.
பழங்கள்
அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப் பழம் ஆகிய இர ண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணாகி விடும்.
காய்கறிகள்
சுத்தம் செய்யப்பட்ட காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவியபின் சமையலுக்கு பயன்படுத்தலம்) சமைத்து உண்ண வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்ககூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.