• கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
• ஆரோக்கியமான குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.
• நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கைகால் வீக்கம் வராமலிருக்கும்.
• அமுக்கராங் கிழங்கை இடித்து 200-மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்கவைத்து 100-மில்லியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.
• மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.
• மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர மாதவிடாய் வலி தீரும்.