Home கருத்தடை கருத்தடை

கருத்தடை

107

கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையமாக கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதை தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.

முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவை தவிர்பது நல்லது.
இரண்டாவது எளிமையான முறை, கருமுட்டை கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்து கொள்ளலாம்.
வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள் மூலம் கரு முட்டையும் கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருத்துவதன் மூலம் கருவளர்வதை தடுக்கலாம்.
கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும். மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.
ேமற் குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவர் அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்ககியத்திற்கு ஏற்றார் போல் கைகொள்ளலாம்.

கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

அ. கருத்தடை – இயற்கை முறை

ஆ. தடுப்பு முறை (கரு முட்டை கரு அணு இணைவதை தடுக்கும் முறை)

நடைமுறை வழக்கத்தில் உள்ள கருத்தடை முறை

கருத்தடுப்பு சாதனங்கள்

ஹார்மோன் முறைகள்

நிரந்தர கருத்தடை முறைகள்