Home பாலியல் கருக்கலைப்பிற்கு பின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

கருக்கலைப்பிற்கு பின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

55

பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும் பாதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதால், அதனை பெண்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு தான் முடிவு எடுத்து கருக்கலைப்பு செய்தாலும், அதனை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் இன்னும் நிறைய பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களை பெண்கள் சந்திப்பார்கள்.

• மார்பகங்கள் வீங்குதல் கருக்கலைப்பு செய்தால், மார்பகங்கள் வீங்கவோ அல்லது தளர்ந்தோ இருக்கும். எனவே சிறிது நாட்களுக்கு தளர்வான பிரா அணிய வேண்டும்.

• கருக்கலைப்பு செய்த பின்னர், தொடர்ந்து 1-2 வாரங்களுக்கு இரத்தப்போக்கு அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி, இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது வெளியேற்றப்படுவதால், அவை கடுமையான வயிற்றுப் பிடிப்புக்களை ஏற்படுத்தும்.

• கருக்கலைப்பிற்கு பின், அவ்வப்போது லேசான இரத்தப்போக்கு ஏற்படும். அத்துடன் கடுமையான வயிற்று வலியையும் சந்திக்கக்கூடும்.

• சில பெண்களுக்கு கருக்கலைப்பிற்கு பின் உடல் பருமனடையும். இருப்பினும் சில பெண்களுக்கு மன இறுக்கத்தினால், சரியாக சாப்பிட முடியாமல், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இவை அனைத்தும் பெண்களின் மனநிலையைப் பொறுத்தது.

• கருக்கலைப்பிற்கு பின் பெண்கள் கடுமையான முதுகு வலியை சந்திப்பார்கள். மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்தால், வலியானது இன்னும் அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும்.

• கருக்கலைப்பினால் கருப்பை வாயானது புண்ணாக இருப்பதால், அப்போது உடலுறவில் ஈடுபட்டால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். எனவே கருக்கலைப்பிற்கு பின் 3 வாரத்திற்கு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

• கருக்கலைப்பிற்கு பின் உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள். இப்படி இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுக்கும் போது, அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

• கருக்கலைப்பிற்கு பின்பு ப்ரௌன் நிற கசிவுகள் பிறப்புறுப்பின் வழியாக அதிகம் வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், கருக்கலைப்பிற்கு பின் உடலானது தானாக சுத்தம் செய்ய ஆரம்பிக்கும். அப்படி ஆரம்பிப்பதால் வெளியேறுவதாகும். ஆனால் இந்த கசிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசும் போது, கடுமையான காய்ச்சலால் அவஸ்தைப்படக்கூடும்.

• கருக்கலைப்பு செய்த பின்னர், அடிவயிறானது உப்புசத்துடன் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இரத்தப்போக்கு மட்டுமின்றி, ஹார்மோன் மாற்றங்களும் தான்.

• கருக்கலைப்பை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் ஓவுலேசன் சுழற்சியானது ஆரம்பித்துவிடும். சிலருக்கு 4-8 வாரங்களுக்குள் மாதவிடாய் சுழற்சியானது ஆரம்பமாகி விடும்.