கரு உண்டாவதைத் தடுக்கும் வீண் முயற்சி…*
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.
ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண்குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.