Home பெண்கள் அழகு குறிப்பு கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா

33

captureபேக்கிங் சோடா சமையலில் மட்டும் பயன்படுவதில்லை, நம் அழகை பராமரிக்கவும் தான் பெரிதும் உதவியாக உள்ளது. இது சருமத்தில் உள்ள உலர்ந்த தோல், பிம்பிள், செல்லுலைட் மற்றும் கருவளையங்கள் போன்றவற்றை போக்க துணை புரிகின்றன.

தற்போது வேலைப்பளுவின் காரணமாக இரவில் நீண்ட நேரம் வேலை முடித்துவிட்டு, தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுவதால், சரியான அளவு ஓய்வு கண்களுக்குக் கிடைக்காமல், கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து அழகைக் கெடுக்கிறது. இந்த கருவளையங்களைப் போக்க பேக்கிங் சோடா கொண்டு முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மேலும் பேக்கிங் சோடா சருமத்தில் எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

தேவையான பொருட்கள் :

பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
சீமைச்சாமந்தி டீ – சிறிது

பேக்கிங் சோடாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். பின் மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.

இந்த முறை கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதோடு, கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளைப் போக்கி, கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.

இந்த செயலை வாரத்திற்கு 3 முறை இரவில் படுக்கும் முன் செய்யுங்கள். முக்கியமாக கண்களுக்கு போதிய ஓய்வைக் கொடுங்கள்.