Home இரகசியகேள்வி-பதில் கணவன் தன் நண்பர்களை அழைத்து வந்து, அவர்கள் மூலம் குழந்தை பெறச் சொன்னர்

கணவன் தன் நண்பர்களை அழைத்து வந்து, அவர்கள் மூலம் குழந்தை பெறச் சொன்னர்

203

id55600_Nishoba-Raj-Tamil-Girl-Mobile-Number-788197sex advice,Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo, southindian,நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு இரண்டு சகோதரர்கள்; ஒரு சகோதரி. நான் கல்லூரியில் படித்துக் கொண்டி ருந்தபோது, என் தகப்பனார் இறந்து விட்டார். என் தாயார், தனக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி, படுக்கையிலேயே இருப்பார். என் 24வது வயதில், நிறைய செலவு செய்து, ஒரு டாக்டருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் நடந்த சில நாட்களில், அவர் ஆண்மை இல்லாதவர் என்று தெரிய வந்த போதும், குடும்ப கவுரவம் கருதி, வாழ்ந்து வந்தேன். ஆனால், அவர் தன் நண்பர்களை அழைத்து வந்து, அவர்கள் மூலம் குழந்தை பெறச் சொல்லி வற்புறுத்தியது மட்டுமல்லாது, மறுத்ததால் என்னை ஊசி போட்டு கொல்லவும் முயன்றார். நான், உடன் பிறந்தோர் மூலம் தப்பி வந்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, விவாகரத்து பெற்றேன்.

பின்னர், என் தாயாருக்கு உதவியாக வீட்டில் இருந்தேன். நான் வீட்டில் இருந்த காரணத்தால், என் தங்கை திருமணம் தடைபடும் நிலை இருந்ததால், என் சகோதரர்களின் வற்புறுத்தல் காரணமாக, மறுமணம் செய்ய உடன்பட்டேன்.
செய்தித்தாள் விளம்பரத்தின் மூலம் வந்த கேரளாவைச் சேர்ந்தவருக்கு, என்னை திருமணம் முடித்தனர் என் சகோதரர்கள். தங்கைக்காக திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டிற்குச் சென்ற நான், விரைவில் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்தேன். என்னை உயிருள்ள பெண்ணாக மதிக் காமல், போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வந்தார் என் கணவர். மேலும், திருமணமான மறு மாதமே, என் தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரச் சொல்லி அனுப்பி விட்டார். என் தாயாரும், தன் உடல்நிலையை காரணம் காட்டி, பணிவிடை செய்ய, என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டார். இந்நிலையில், என் தங்கையின் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வந்த என் கணவர், பணம் கேட்டு என்னிடம் பிரச்னை செய்தார். நானும், என் தாயாரிடம் கேட்டேன். என் தாயார் வீட்டில் தங்கியிருந்த என் கணவர், தினமும் குடித்துவிட்டு, இரவில் பிரச்னை செய்ததால், என் தாயார் அவரிடம் சண்டை போட்டார், அதனால், கோபித்துக் கொண்டு மும்பை சென்று விட்டார். இதுநாள் வரையில் அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை. அவரது உறவினர்களிடம் கேட்டபோது, அவர்களுக்கும் தெரியவில்லை. ஒன்பது ஆண்டுகளாக, என் கணவரின் நிலை பற்றி ஏதும் தெரியாது. என் தாயாருக்கு உதவியாக இருந்து வருகிறேன். இடையில், எனக்கு கர்ப்பப்பையில் பிரச்னை ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது. இப்போது, எனக்கு 39 வயதாகிறது. என் மாமன் மகன், என்னை விட 14 வயது மூத்தவர். நான் சிறு பெண்ணாக இருந்தபோது, என்னை திருமணம் செய்ய விரும்பினார். அன்று அவர், வசதி குறைவான நிலை என்பதாலும், வயது வித்தியாசம் 14 என்பதாலும், என் தாயார் அவருக்கு என்னை திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.
இருப்பினும், எங்களது குடும்ப பிரச்னையைத் தீர்க்க, அவர் பெரிதும் உதவி யாக இருந்து வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், என் கர்ப்பப் பையில் அறுவை சிகிச்சை நடந்த போது, யாரும் கவனிப்பார் இன்றி நான் மருத்துவ மனையில் இருந்தபோது, தினமும் வந்து பார்த்து, எனக்கு ஆறுதல் சொல்லி, என்னை மனரீதியாக தைரியப்படுத்தினார். அது முதல், அவருடன் பேசிப் பழக வேண்டும் என்று எண்ணத் தொடங்கினேன். அன்று தொடங்கிய எங்களது தொடர்பு, இன்று வரை தொடர்கிறது. எனினும், மனைவி, குடும்பம் என்று உள்ள அவரின் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க நான் எண்ணவில்லை.

என்னை சந்திக்க வந்த என் மாமன் மகனிடம், நானாகவே என்னை இழந்தேன். ஆறு மாத காலம், வாரம் இரண்டு நாட்கள், நான் என்னையே மறந்து வாழ்ந்தேன். அவரது மனைவி, அவரை விட மூத்தவர் என்ற முறையிலும், வயது வந்த குழந்தைகள் என்பதாலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத நிலை என்பதாலும், என் மீது பாசம் வைத்திருந்தார். ஆனாலும், குடும்பத்தில் அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து கொண்டார்.
இந்நிலையில், என் தாயார், தனக்கு உதவி செய்ய வேண்டியவள் பிரிந்து போய் விடுவாளோ என்று எண்ணி, என் மாமன் மகனின் மனைவியிடம் சென்று, எங்களது உறவைப் பற்றி சொல்லி, பிரச்னைகள் உருவாக்கி, இருவரையும் பிரித்து விட்டார். ஆனால், என் மாமன் மகனின் மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் படித்தவர்கள் என்பதால், பிரச்னையை பெரிதுபடுத்தாமல் நடந்து கொண்டனர்.
தற்போது, அவரது மகளுக்கு திருமணமாகி, மகனும் நல்ல தொழில் தொடங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களது உறவு மொபைல் போன் மூலமும், பொது இடங்களில் சந்திப்பு என்ற அளவிலும் உள்ளது.
என் சகோதரர்களில் ஒருவன் இறந்து விட்டான்; மற்றொருவன், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான். என் உணர்ச்சிகளை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான் வேதனை.
என் சகோதரன், தாயார் இருவரும், சம்பளம் இல்லா பணிப்பெண் என்ற அளவில் என்னை பயன்படுத்தி வருகின்றனர். என் உடல்நிலையும், மனமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன செய்வது என புரியாத நிலை. என் மனக்குழப்பத்திற்கு நல்ல வழி காட்டுவீர்கள் என நம்புகிறேன்.
— பெயர், விலாசம் வெளியிட விரும்பாத வாசகி.

அன்பு மகளுக்கு—

உன் நீண்ட கடிதம் கிடைத்தது. உன் கையெழுத்தை வைத்து, நீ தனித்துவமானவள், சுதந்திரமாய் செயல்படக் கூடியவள், மெத்தப் படித்தவள் என யூகிக்கிறேன்.
தன்னை நிரந்தர நோயாளியாய் பாவித்து, படுக்கையில் படுத்திருக்கும் அம்மா. இறந்து விட்ட தந்தையும், ஒரு சகோதரனும். பிரம்மச்சாரியாய் ஒரு சகோதரன். திருமணம் செய்து செட்டிலான ஒரு சகோதரி. விவாகரத்து செய்யப்பட்ட ஆண்மையில்லாத முதன் கணவன். கடந்த 10 ஆண்டுகளாய் தலைமறைவாய் இருக்கும் இரண்டாவது கணவன். உன் உடலை விட்டு உயிரை நேசிக்கும் (?) 53 வயது மாமன் மகன். இத்தனைக்கும் நடுவில் நீ.
உன் மாமன் மகன், உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக பரிதவித்திருக்கிறார். உன் இரு திருமணங்கள் தோற்றது அவருக்கு ரகசிய சந்தோஷம். உன் கர்ப்பப்பை அகற்றப்பட்ட பின், நீ உடலாலும், மனதாலும் வெலவெலத்துப் போய் விட்டாய். தன் பால்ய கால கனவு நாயகிக்கு உதவிகள் செய்து, அவள் மனதில் இடம் பெற்றிருக்கிறார். தொடர்ந்து விருப்பம் இல்லாதது போல் நடித்து, உன்னுடன் ஐம்பது தடவைக்கு மேல் தாம்பத்யம் வைத்துள்ளார்.

உன் அம்மா கோள்மூட்டியும், மாமன் மகன் குடும்பம், உங்கள் தொடர்பை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், உன் மாமன் மகன், உங்களின் உறவை திருமணம் வரை இழுத்துச் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
உன் மாமன் மகன் ஒரு சுயநலவாதி. உன்னை, உன் உடலை, காலம் கடந்தாவது ஜெயித்து விட்டோம் என்ற வக்கிர மகிழ்ச்சி அவருக்கு. உன் அம்மாவும், சகோதரனும், உன்னை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பாவிக்கின்றனர். இரு திருமணங்களில் தோற்றுப் போனவள், வீட்டு வேலைகள் செய்து, அடங்கிக் கிடக்கட்டுமே என்ற அகங்காரம் அவர்களுக்கு.
இரு திருமணங்கள் மூலம் உனக்கு குழந்தை இல்லாதது பெரிய பிளஸ் பாயின்ட். குழந்தைகள் இருந்திருந்தால், இவர்களை உதறித் தள்ளிவிட்டு, குழந்தைகளுக்காக ஒரு போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருப்பாய். உன்னோடு சேர்ந்து, உன் குழந்தைகளும், ஒரு குழந்தை தொழிலாளர் ஆகியிருப்பர் – இது மைனஸ் பாயின்ட். இனி, ஆகக் கூடியதை பேசுவோம்.
உன் இரண்டாவது கணவன் காணாமல் போய், ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகின்றன. காணாமல் போனதை, காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகாராய் தெரிவித்திருக்கிறாயா? “டிவி’ மூலம், செய்தித் தாள் மூலம், “காணவில்லை’ என அறிவிப்பு செய்திருக்கிறாயா?

இந்து திருமண சட்டம் 1955ன் படியும், இந்திய சான்று சட்டம் பிரிவு 108ன் படியும், ஒரு கணவன், ஏழாண்டுகளுக்கு மேல் எங்கிருக்கிறார், எந்த நிலையில் இருக்கிறார் என்ற விவரங்களை மனைவி அறியாமல் அல்லது கேள்விப்படாமல் இருந்தால், அக்கணவன் இறந்து விட்டதாக முடிவுக்கு வரலாம்.

முறைப்படி, நீ நீதிமன்றத்தில் மனு செய்து, உன் இரண்டாவது திருமணத்தை சட்டப்படி ரத்து செய்யலாம். வேண்டுமென்றே உன்னுடன் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ளாது, உன் கணவன் உயிருடன் இருந்தாலும் கூட, சட்டம் அவனை இறந்தவனாகவே கருதும். இஸ்லாமிய திருமண இழப்பு சட்டம் 1939ன்படி, முஸ்லிம் கணவன் காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியிருந்தாலே போதும், திருமணம் ரத்தாகி விடும்.
மாமன் மகனை, தன் குடும்பத்தாரின் சம்மதத்தை பெற்று வந்து உன்னை மணந்து கொள்ளச் சொல். உங்கள் மணத்திற்கு, மாமன் மகனின் மனைவியின் எழுத்துப்பூர்வ சம்மதம் தேவை. மனைவி சம்மதம் தராவிட்டால், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்து, உன்னை மணந்து கொள்வாரா எனக் கேள். இரண்டிற்கும் அவர் தயாராய் இருக்க மாட்டார். ஆகவே, உங்களது தொடர்பை பிளட்டோனிக் ரிலேஷன்ஷிப்பாக மாற்றிக் கொள் அல்லது துண்டி.
மாமன் மகன் தேடித் தரும் வேலையில் சேர். ஆனால், தாயின் வீட்டிலிருந்தே வேலைக்கு போ. சுயநல தாய்க்கு செய்யும் சேவையும் இறைவனுக்கு உவப்பானதே. நீ வெளியிடத்தில் தங்கி வேலைக்கு போனால், தியாகிகள் வேஷம் போட்ட புது ஆண்கள் உன்னை சுற்றி வர ஆரம்பிப்பர்.

முதல் இரு திருமணங்களில் உன் தவறு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை தனிமையில் அமர்ந்து, நடுநிலையாய் யோசி. உன் தவறு 20 சதவீதம் இருந்தால் கூட, மூன்றாம் திருமணம் செய்து கொள்ளாதே. மும்முறை தற்கொலைக்கு முயன்றவள் நீ. மூன்று முயற்சிகளுமே, உன் சோகங்களை பூதக்கண்ணாடி வைத்து சமூகத்திற்கு காட்டும் கண்காட்சி முயற்சிகள். உனக்கு பொறுப்புடன் வரன் பார்க்கப்படவில்லை. காரணம், உன் சகோதரர்கள்.
சாய்பாபா பக்தையான உன்னால், உணர்வு களை கட்டுப்படுத்த முடியவில்லை. மாமன் மகனை சட்டப்பூர்வமாய் மணந்து, மாமன் மகன் குடும்பத்துக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை நீ. தவிர, வேறு நபரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் விஷப்பரிட்சை யிலும் இறங்க விரும்பவில்லை. எனக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும் சொல்கிறேன் – உன் மாமன் மகனுடன், “கம்பேனியன்ஷிப்’ உறவைத் தொடர்.