கணபதி, பிள்ளையார் என்னும் பல செல்லப் பெயரைக் கொண்ட விநாயகருக்கு, பிடிக்காத உணவுகளே இல்லை. அவருக்கு பிடித்த உணவுகள் என்று சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவு அவர் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். அவ்வாறு விரும்பி சாப்பிடுவதில் ஒன்று தான் கோதுமை அப்பம். இந்த கோதுமை அப்பத்தை, விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் செய்து கணபதிக்கு படைத்து வந்தால், விநாயகர் வீட்டிற்கு வந்து விரும்பி சாப்பிடுவார் என்பது நம்பிக்கை. ஆகவே அத்தகைய கோதுமை அப்பத்தை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
தேங்காய் பவுடர் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் பவுடர், ஏலக்காய் தூள், சோடா பவுடர் மற்றும் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய்யை ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு, பொரிக்க வேண்டும்.
இப்போது கணபதிக்குப் பிடித்த கோதுமை அப்பம் ரெடி!!!