Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கட்டான உடலமைப்பை பெற விரும்பும் ஆண்களுக்கு

கட்டான உடலமைப்பை பெற விரும்பும் ஆண்களுக்கு

39

920.0.ஆண்கள் தங்கள் அழகை வெளிக்­காட்ட, உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற எண்­ணு­வார்கள். அத­னையே பெண்­களும் ஆண்­க­ளிடம் விரும்­பு­கி­றார்கள். அதனால் ஆண்கள் உடம்பை ஏற்ற மணிக்­க­ணக்கில் ஜிம்மில் நேரத்தை செல­வி­டு­கி­றார்கள்.

நல்ல உடல்­கட்டு வேண்டும் என்று எண்­ணு­ப­வர்கள் எப்­போதும் தீவிர உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட்டால் மட்டும் போதாது. உடல் கட்­ட­மைப்பில் உண்ணும் உணவும் முக்­கிய இடம் பிடிக்­கி­றது.

ஆகவே போதிய உடற்­ப­யிற்­சி­யுடன், சரி­யான மற்றும் ஆரோக்­கி­ய­மான உணவை உட்­கொள்­வது மிகவும் அவ­சியம். உடற்­ப­யிற்­சிக்கு ஈடாக ஆரோக்­கி­ய­மான உணவும் உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற உத­வு­கி­றது.

ஓட்ஸ் கஞ்சி
ஓட்ஸ் கஞ்­சியில் அதிக நார்ச்­சத்து உள்­ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்­கரை நோயை குறைக்கும். மற்றும் கொழுப்பு தேங்­கு­தலை குறைக்­கி­றது.

முட்டை
உடல் கட்­ட­மைப்பை ஏற்ற நினைப்­ப­வர்கள் கண்­டிப்­பாக முட்­டை­களை சாப்­பிட வேண்டும். இதில் விற்­றமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்­துக்கள் அதிக அளவில் உள்­ளன.

பாலா­டைக்­கட்டி
உடல் கட்­ட­மைப்பை ஏற்ற விரும்­பு­ப­வர்­க­ளுக்கு பாலா­டைக்­கட்டி ஒரு வரப்­பி­ர­சா­தமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்­ளது.

வேர்க்­க­டலை வெண்ணெய்
புர­தச்­சத்து, விற்­ற­மின்கள், மெக்­னீ­சியம் மற்றும் நார்ச்­சத்­து­போன்­றவை நிறைந்­தது தான் நிலக்­க­டலை வெண்ணெய். இதை அள­வாக எடுத்துக் கொண்டால், இதய தசை­களை மேம்­ப­டுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.

நண்டு
நண்டு, எலும்பின் ஆரோக்­கி­யத்­திற்கு பெரிதும் உறு­து­ணை­யாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவை­யான ஆக்­ஸி­ஜ­னேற்றத் தடுப்­பான்கள் நிறைந்­துள்­ளதால், இது தசைக்கு பலத்­தையும், உடலில் எதிர்ப்பு சக்­தி­யையும் அதி­க­ரிக்கும்.

வாழைப்­பழம்
உடலை ஏற்­று­ப­வர்கள் பலரும் அதி­கப்­ப­டி­யாக சாப்­பி­டு­வது வாழைப்­ப­ழத்தை தான். இதில் ட்ரிப்­டோபைன் நிறைந்­தி­ருப்­பதால், இது செரோ­டோனின் உற்­பத்­திக்கு உறு­து­ணை­யாக இருந்து, நரம்­பு­களை சாந்­தப்­ப­டுத்தும். மேலும் இதில் உணவு கட்­டுப்­பாட்­டுக்கு உறு­து­ணை­யாக நிற்கும் மெக்­னீ­சியம் மற்றும் கல்­சியம் அதி­க­மாக இருப்­பதால், எலும்பின் ஆரோக்­கி­யத்­திற்கு பக்க பல­மாக இருக்கும்.

மிளகாய்
உணவில் மிளகாய் சேர்ப்­ப­தனால், உடலில் நோய்த்­தொற்­றுகள் ஏற்­ப­டு­வதை இது தடுக்கும். உடல் எடையை வேக­மாக குறைக்க உதவும்.

சர்க்­க­ரை­வள்ளி கிழங்கு /
வற்­றாளைக் கிழங்கு
சர்க்­க­ரை­வள்ளி கிழங்­கு­களில் கார்­போ­வைரேட் அதிகம் நிறைந்து உள்­ளது. இதி­லுள்ள சர்க்­கரை ஆக்­கத்­திறன் மற்றும் தாங்கு திறனை அதி­க­ரிக்க செய்யும்.

அத்­திப்­பழம்
இரும்பு போல உடலை வளர்க்க விரும்­பு­ப­வர்கள் கண்­டிப்­பாக அத்­திப்­ப­ழத்தை சாப்­பிட வேண்டும். அத்­திப்­ப­ழத்தில் தேவை­யான கனி­மச்­சத்­துக்கள் நிறைந்­தி­ருப்­பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத் தின் (Alkali) அளவை சம­நி­லை­யோடு வைத் துக் கொள்­ளலாம்.

காளான்
காளான் தசை வளர்ச்­சிக்கு பெரிதும் உறு­து­ணை­யாக விளங்­கு­கி­றது.

இறைச்சி
ஆட்டு இறைச்­சியில் அதி­க­மான அளவில் விலங்­கின புரதம் இருக்­கி­றது. அதனால் தசை வளர்ச்­சிக்கு பெரிதும் உத­வு­கி­றது.
பருப்பு வகைகள்
சரி­யான உடல் கட்­ட­மைப்பு வேண்­டு­மானால், பருப்பு வகை­களை கண்­டிப்­பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வழ­மை­யான புர­தச்­சத்து, அதி­முக்­கிய விற்றமின்கள் மற்றும் கனி­மச்­சத்­துக்கள் உள்­ளதால், தசை­களின் ஆரோக்­கியம் நன்­றாக இருக்கும்.

சால்மன் மீன்
சால்மன் மீனில் அதிக அளவு மோனோ அன்­சாச்­சு­ரேடட் கொழுப்பு அமி­லங்கள் அடங்­கி­யுள்­ளது. மேலும் இதில் அலர்ச்சியை தடுக்கும் குணங்கள் அடங்­கி­யி­ருப்­பதால், உடற்­ப­யிற்சி செய்த பின் சாப்­பி­டு­வ­தற்கு சிறந்த உண­வாகும்.
அன்­னா­சிப்­பழம்

அன்­னா­சிப்­பழம் நோய்த்­தொற்­றுகள் வராமல் தடுத்து, தசை வளர்ச்­சிக்கு துணை நிற்கும்.