Home சமையல் குறிப்புகள் கட்டா கறி

கட்டா கறி

24

என்னென்ன தேவை?

கட்டா செய்ய…

தனியா விதைகள் – 1 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக நொறுக்கியது),
பெருங்காயம் – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டிஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
கடலை மாவு – 1/2 கப்,
லோஃபேட் தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – சில சொட்டுகள்.

கிரேவிக்கு…

பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி – 1 பெரிய துண்டு,
லோஃபேட் தயிர் – 1 கப்,
தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

கட்டா கடலை மாவுடன் கட்டா செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து நீளமாக உருட்டி கொள்ளவும். அவற்றை கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து தண்ணீரை வடிகட்டிவிட்டு ஆறவிடவும். வடி கட்டிய தண்ணீரை கிரேவிக்காக எடுத்து வைக்கவும். ஆறிய கட்டாவை ஒரு இஞ்ச் அளவு துண்டுகளாக வெட்டவும்.கிரேவிவெங்காயம், இஞ்சியை விழுதாக அரைக்கவும். தயிரில் அனைத்து தூள்களையும் சேர்த்து, உப்பும் கலந்து வைக்கவும். ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு போட்டு தாளிக்கவும். வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். தயிர்க் கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் சிம்மில் வைக்கவும். வெட்டி வைத்த கட்டாவை சேர்த்து, கட்டா வடிகட்டிய தண்ணீரை தேவைக்கேற்ப ஊற்றி, சிம்மில் 10 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.தயிரில் கடலை மாவு சேர்த்தால் கிரேவி கெட்டியாக வரும்.