Home உறவு-காதல் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயம் அனுபவித்திருக்கும் 7 வகையான காதல்!!!

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயம் அனுபவித்திருக்கும் 7 வகையான காதல்!!!

30

நம்மில் பலரும் காதலை ஒரு ரொமான்டிக் உணர்வாக எண்ணிக் கொண்டிருக்கையில், காதலில் பல்வேறு வகைகளை நமது வாழ்வில் அனுபவித்து வருகிறோம் என்பது தான் உண்மை. இரண்டு பேர் மனதோடு மனதாக ஒன்றிணைந்து காதல் வயப்பட்டு, முடிவில் குடும்பமாக, குழந்தைகளை பெற்றுக் கொள்வது தான் காலம் காலமாக நாம் காதலுக்குக் கொடுத்து வந்த இலக்கணம். இது போன்ற சில உணர்வுகளை நீங்கள் ஏற்கனவே அனுபவித்திருக்கலாம், ஆனால் அது எந்த வகையான காதல் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது.

அழியாத காதல் மிகவும் மோசமாக நம்மை துன்பத்தில் ஆழ்த்தவும் மற்றும் கடுமையான வலியைத் தரக்கூடியதாகவும் இருப்பது தான் இந்த அழியாத காதல். உங்களில் பெரும்பாலானவர்கள் இதயத்தை உடைக்கக் கூடிய இந்த காதலை சாதாரணமாக உணர்ந்திருக்க மாட்டீர்கள்.உங்களை விரும்பாத ஒரு நபரின் உண்மையான அன்பைப் பெறுவதற்காக அளவுக்கு மீறிய மற்றும் உணர்வு ரீதியான ஆசையை வளர்த்த்துக் கொள்ளாமல், உங்களை கட்டுப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த வலியை கையாளவும் மற்றும் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த உணர்வின் பக்கம் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கவும் முயற்சி செய்யுங்கள். மெதுவாக முன்னேறிச் செல்லுங்கள், உங்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைக் காண்பீர்கள்.

காமம் இல்லாத காதல் நீங்கள் உயர்வாக மதிப்பவரின் மீது பாலியல் அல்லது ரொமான்டிக் உணர்வை ஏற்படுத்தாத காதலாக இது இருக்கும். நண்பர்களுக்கிடையில் இந்த காமமற்ற காதல் உருவாகும். ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மனிதர்களுடன் வேலை செய்யவும், ஒருங்கிணைந்து நடக்கவும் செய்யும் மனிதராக நீங்கள் இருப்பதால், இது மிகவும் சாதாரணமாக காணப்படும் காதலாக உள்ளது. உங்களுடைய மனம், ஆன்மா ஆகியவற்றைக் கவர்ந்து, ஆன்மீகமான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்தக் கூடிய ஒரு அழகான மற்றும் அன்பான மனிதரின் மேல் இந்த காமமற்ற காதல் எளிதில் உருவாகும்.

சுயமான காதல் உங்களை நீங்கள் அற்புதமான மனிதராக நினைக்கிறீர்களா? இல்லையெனில், உங்களுடைய சுய-மரியாதையில் உங்களுக்குப் பிரச்சனைகள் இருக்கலாம். இந்த உண்மையை சரிசெய்ய நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.
முதலாவதாக நீஙகள் செய்ய வேண்டியது, உங்களையே நீங்கள் விரும்ப வேண்டும், அதன் தொடர்ச்சியாக மற்றொரு மனிதரை விரும்பக் கூடிய வாய்ப்பு வரும்.நீங்கள் இன்னமும் தயங்கி நின்றால், உங்களிடம் உள்ள அனைத்து நல்ல மற்றும் கெட்ட குணங்களைப் பற்றி ஒரு சிறிய பேப்பரில் எழுதத் தொடங்குங்கள்.

உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளத் தயங்க வேண்டாம். இவ்வாறு செய்து, உங்களை நீங்கள் விரும்புவதை உணருங்கள் மற்றும் மற்றவர்களின் அன்பு உங்களுக்குத் தேவை எனவும் உணருங்கள்.

சிற்றின்பம் நிறைந்த காதல்
உங்களுடைய பணியின் போது அழகான ஒருவரை நீங்கள் தினமும் சந்திக்க நேரிடலாம். உங்களுக்கு எந்தவிதமான உணர்வும் வராத போதும், அந்த சிவந்த கோவைப்பழ உதடுகளை மட்டும் சுவைக்கத் தோன்றலாம். அந்த நபரைப் பற்றிய எண்ணத்தை நீங்கள் சற்றே உருவாக்கி இருப்பீர்கள் மற்றும் அவரைப் பற்றிப் போதுமான தகவல்களை சேகரித்திருப்பீர்கள். அவருடைய பெயரையாவது தெரிந்து கொண்டிருப்பீர்கள். மற்றபடி உங்களுக்கு வேறெந்த அக்கறையும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்.

தூய்மையான காதல்
இந்த காதலை திரைப்படங்களில் நீங்கள் கண்டிருக்கலாம். நீங்கள் விரும்பும் மனிதரின் இதயம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய அனைத்தையும் போற்றச் செய்யும் வகையிலான வலிமையானது இந்தக் காதல். இரண்டு அற்புதமான மனிதர்கள் கட்டுப்பாட்டை இழந்து, உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும் உணர்வுதான் இது. தூய்மையான காதலை அனுபவித்தவர்களை உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதர்களாகக் கருதலாம். தூய்மையான, உண்மையான அன்பை ஒரு முறை மட்டுமே தர முடியும் என்பது நம்பிக்கை!

சிறுபிள்ளைக் காதல்
குழந்தையாக இருக்கும் போது வரும் இந்தக் காதலை அனைவரும் அனுபவித்திருப்போம். இந்த காதல் முழுமையாக அறியாமையால் உருவானதாகும். அந்த மனிதரை நீங்கள் சிறிய, அழகிய நாய்க்குட்டியாக கருதி வரும் காதலாக இருப்பதால், இதனை ‘பப்பி லவ்’ என்பார்கள்.

அடைய முடியாத காதல்
நடிகர் சூர்யாவை நீங்கள் விரும்பியிருக்கிறீர்களா? இது போன்ற காதல் பிரச்சனைகளை ஒவ்வொருவரும் எதிர்கொள்வதை நாம் பார்த்திருப்போம். நீங்கள் அடைய முடியாத இந்தக் காதல் எவ்வளவு வயதானதாக இருந்தாலும், அந்த மனிதரை எண்ணி நீங்கள் பகல் கனவு காண்பதை விட்டிருக்க மாட்டீர்கள்.
உங்களுக்கு விருப்பமான அந்த ஸ்டாருடன் நீங்கள் வாழ்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம் என்றாலும், இது போன்ற அளவுக்கு அதிகமான ஆசையை ஊற்றும் எண்ணங்களுக்கு ஆற்றுக்கால் என்று எதுவும் இல்லை உங்களிடம். பெரும்பாலான நடிகர்களும் சிறப்பானவர்களாக இருப்பதால், அவர்களிடம் காதல் வயப்படுவதைத் தவிர்க்கும் வழிகள் எதுவும் உங்களுக்கும் கிடைப்பதில்லை.

வயது ஆக ஆக ஒவ்வொரு வகையான காதலையும் நீங்கள் அனுபவிக்கத் தொடங்குவீர்கள். இதுவரை நீங்கள் எந்த வகை காதலை அனுபவித்திருக்கிறீர்கள்? அதில் எந்த காதல் மிகவும் வலிமையானது என்று நினைக்கிறீர்கள்?