Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலியன் டயட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலியன் டயட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

25

Lankabbc-22இன்றைய தலைமுறையினர் உடல் பருமனால் அதிகம் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆகவே பலரும் தங்களது உடல் எடையைக் குறைக்க பலவிதமான டயட்டுகளைப் பின்பற்றி வருகின்றனர். சிலர் உடல் எடையை வேகமாக குறைக்கிறேன் என்று பல கடுமையான டயட்டுகளைப் பின்பற்றுவார்கள் .

ஆனால் உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டுகளைப் பின்பற்றுவதால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், அதன் காரணமாக பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்கள், எப்போதும் சரியான டயட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

நீங்கள் ஒரே மாதத்தில் 12 கிலோ வரை எடையைக் குறைக்க நினைத்தால், பிரேசிலியன் டயட்டைப் பின்பற்றுங்கள். இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள் தான் அதிகம் இடம் பெறும். மேலும் ஒரு நாளைக்கு 4-5 வேளை உணவு உட்கொள்ள வேண்டியிருக்கும். சரி, இப்போது அந்த டயட் குறித்து காண்போமா!!!

திங்கள்

காலை உணவு: 1 ஆரஞ்சு, 1 வாழைப்பழம் மற்றும் 1 கப் ஆரஞ்சு ஜூஸ்

ஸ்நாக்ஸ்: 1 கப் ஆரஞ்சு ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

மதிய உணவு: 100 கிராம் வேக வைத்த மீன், 100 கிராம் காய்கறி சாலட்

இரவு உணவு: 100 கிராம் வேக வைத்த மீன், 100 கிராம் காய்கறி சாலட்

இரவு தூங்கும் முன்: 1 கப் ஆரஞ்சு ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

செவ்வாய்

காலை உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 கப் ஆப்பிள் ஜூஸ்

ஸ்நாக்ஸ்: 1 துண்டு பிரட் டோஸ்ட், 1 கப் ஆப்பிள் ஜூஸ்

மதிய உணவு: 100 கிராம் வேக வைத்த இறைச்சி, 2 வேக வைத்த உருளைக்கிழங்கு, 4 லெட்யூஸ் இலைகள்

இரவு உணவு: 200 கிராம் வேக வைத்த மீன், 1 வேக வைத்த முட்டை, லெட்யூஸ், பட்டாணி

இரவு தூங்கும் முன்: 1 கப் ஆப்பிள் ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

புதன்

காலை உணவு: 1 கப் பால், 1 துண்டு பிரட் டோஸ்ட்

ஸ்நாக்ஸ்: 100 கிராம் கொழுப்பில்லா சீஸ்

மதிய உணவு: 100 கிராம் சாதம், 1 கப் முட்டைக்கோஸ், பார்ஸ்லி கொண்டு செய்யப்பட்ட சாலட்

இரவு உணவு: 100 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 ஆப்பிள், 4 லெட்யூஸ் இலைகள்

இரவு தூங்கும் முன்: 1 கப் ஆப்பிள் ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

வியாழன்

காலை உணவு: 1 கப் அன்னாசி ஜூஸ், 60 கிராம் அன்னாசி

ஸ்நாக்ஸ்: 1 கப் அன்னாசி ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

மதிய உணவு: 100 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 சிறிய துண்டு சீஸ் மற்றும் 1 ஆரஞ்சு

இரவு உணவு: 2 வேக வைத்த உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆயிலில் துருவிய கேரட் சேர்த்து வதக்கியது ஒரு கப்

இரவு தூங்கும் முன்: 1 கப் அன்னாசி ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

வெள்ளி

காலை உணவு: 1 கப் ஆப்பிள் ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

ஸ்நாக்ஸ்: 1 ஆப்பிள், 1 ஆரஞ்சு

மதிய உணவு: 150 கிராம் வேக வைத்த மீன், 2 வேக வைத்த கேரட்

இரவு உணவு: 1 பௌல் வெஜிடேபிள் சூப், 1 துண்டு பிரட்

இரவு தூங்கும் முன்: 1 கப் ஆரஞ்சு ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

சனி

காலை உணவு: 1 கப் ஆப்பிள் ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

ஸ்நாக்ஸ்: ஆலிவ் ஆயிலில் துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கியது ஒரு கப்

மதிய உணவு: 1 பௌல் வெஜிடேபிள் சூப், 1 துண்டு பிரட்

இரவு உணவு: 100 கிராம் ப்ரைடு காளான், 100 கிராம் வெஜிடேபிள் சாலட்

இரவு தூங்கும் முன்: 1 கப் ஆப்பிள் ஜூஸ், 2 பிஸ்கட்

ஞாயிறு

காலை உணவு: 1 வாழைப்பழம், 1 கையளவு திராட்சை

ஸ்நாக்ஸ்: 1 கப் கேரட் ஜூஸ், 1 துண்டு பிரட் டோஸ்ட்

மதிய உணவு: 100 கிராம் வேக வைத்த இறைச்சி, 100 கிராம் முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து செய்த சாலட்

இரவு உணவு: 1 பௌல் வெஜிடேபிள் சூப், காளான் சூப், 4 லெட்யூஸ் இலைகள்

இரவு தூங்கும் முன்: 1 கப் ஆப்பிள் ஜூஸ், 2 உலர் அத்திப் பழம்

குறிப்பு

இந்த டயட்டை 1 மாதத்திற்கு மேல் பின்பற்ற வேண்டாம். மேலும் ஒரு மாதம் முடிந்த பின், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, புரோட்டீன் உணவுகளை மெதுவாக சேர்த்து வாருங்கள். இந்த பிரேசிலியன் டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் இருப்பதால், இது உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கச் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

உடற்பயிற்சி

முக்கியமாக இந்த டயட்டை பின்பற்றும் போது, தினமும் 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சிகளான வாக்கிங், சைக்கிளிங் அல்லது நீச்சல் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் உடல் எடை ஆரோக்கியமாக வழியில் இன்னும் வேகமாக குறையும்.