Home சூடான செய்திகள் ஒருவரின் முக வடிவம் – அவர் செக்ஸ் உணர்வை சொல்லும்…

ஒருவரின் முக வடிவம் – அவர் செக்ஸ் உணர்வை சொல்லும்…

24

அனுதினமும் உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பல்கலைகழகத்தில் ஆய்வாளரோ, பேராசிரியர்களோ ஏதோ ஒரு ஆய்வை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதில் சில ஆய்வுகள் மட்டுமே தெளிவாக, மக்களுக்கு தேவையானதாக இருக்கும். பெரும்பாலான ஆய்வுகள் “எதுக்கு” வகையில் தான் இருக்கும்.
அந்த வகையில், கனடாவின் ஒன்டாரியோவை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு நபரின் முக வடிவத்தை வைத்து, அவர் செக்ஸுவல் செயல்பாடுகளில் எப்படிப்பட்டவர், எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளவர், அவர் உறவில் ஏமாற்றும் நபரா என்பதை அறிய ஒரு ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் அவர்கள் கண்டுபிடித்துள்ள தகவல்கள்…
சதுரம், அகலம்!
இளைஞர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சதுரமான, அகலமான முக வடிவம் கொண்டவர்களே செக்ஸுவல் ஈடுபாடுகளில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்றும். மற்ற முக வடிவம் கொண்டவர்களோடு ஒப்பிடுகையில், இவர்கள் தான் தங்கள் துணையை அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர்.
எந்த மாதிரி?
இந்த ஆய்வில், செக்ஸுவல் விஷயங்களில் இருக்கும் ஆர்வம் மட்டுமின்றி, அவர் எந்த வகையில் உடலுறவில் ஈடுப்பட கூடியவர் என்றும் ஆராய்ந்துள்ளனர். அதில் ஆக்ரோஷமாக, மென்மையாக என பல பிரிவுகள் கொண்டு கேள்விகள் கேட்டு, பதில் பெற்றுள்ளனர்.
ஸ்டீவன் அர்னொகி!
ஒன்டாரியோவில் உள்ள நிபிசிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியலாளர் ஸ்டீவன் அர்னொகி தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் பல்வேறு முக வடிவ தோற்ற வித்தியாசங்கள் கொண்ட 145 நபர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்களிடம் உறவுகள் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
அகலமான முகம்!
அகலமான முக வடிவம் கொண்ட நபர்கள், செக்ஸுவல் செயல்பாட்டில் ரிலாக்ஸாக, கேசுவலாக ஈடுபடுகிறார்கள். இவர்களிடம் சில ஒழுக்கமற்ற நடத்தை, தவறான எண்ணம் மற்றும் உளப்பிணி பண்புகளும் இருக்கின்றன. இவர்களிடம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற ஆசையும், தனது எதிர்பாலின நபரை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் காணப்படுகிறது. ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து மாணவர்களும் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரவர் விருப்பம்!
கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமின்றி, ஒவ்வொருவரின் செக்ஸுவல் விருப்பங்கள், ஆர்வம் ஆசைகள், சுய இன்பம் காணும் பழக்கம் குறித்தும் இந்த ஆய்வில் கேட்டரியப்பட்டுள்ளது. மேலும், ஆய்வில் பங்கெடுத்த நபர்களின் முக வடிவ அகலம், உயரம் கணக்கு எடுத்து, ஒவ்வொருவரையும் வகை பிரித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையை செக்ஸுவல் பிஹேவியர் என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.