Home பாலியல் ஒரு நாளைக்கு எத்தனை முறை சுயஇன்பம் கொள்ளலாம்?..

ஒரு நாளைக்கு எத்தனை முறை சுயஇன்பம் கொள்ளலாம்?..

72

சுய இன்பம் என்பது தவறான ஒரு பழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதை செய்யாமல் இல்லை. உண்மை என்னவென்றால் சுய இன்பம் என்பது சாதாரண ஒன்று தான்.

சுயஇன்பம் மேற்கொள்வது சரி. அது எவ்வளவு முறை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. சுயஇன்பம் என்பது காம இச்சையைத் தீர்த்துக் கொள்கிற ஒரு வடிகாலாகவே இருக்கிறது. அதனால் அது உடல் இன்பம் மட்டுமல்ல மன அழுத்தத்தையும் போக்கக்கூடியது

சமீபத்தில் ஹார்வெர்ட் டி.எச்.ஷான் சுகாதாரப் பள்ளியில் இதுகுறித்து ஓர் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அந்த ஆய்வில், ஒரு மாதத்துக்கு குறைந்தது 21 முறை சுயஇன்பம் அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வானது 32, 000 பேர் கொண்டு நடத்தப்பட்டது. அதிகமுறை உடலுறவு கொள்பவர்களுக்கும் சுய இன்பம் மேற்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டட் புற்றுநோய் உண்டாகும் மிகமிகக் குறைவு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மாதத்துக்கு 21 முறை சுயஇன்பம் கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு 32 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறதாம்.

அதேசமயம் மிகக் குறைவாக உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கும் மிகக் குறைவாக உச்சமடையும் ஆண்களுக்கும் தான் இந்த புராஸ்டட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக அளவில் உச்சகட்டம் அடைய வேண்டுவது பல நோய்களைத் தடுக்கிற காரணியாக இருக்கிறது.

ஒரு நாளைக்கு இத்தனைமுறை தான் சுயஇன்பத்தில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் 3 முறை என்பது அளவானது. ஆரோக்கியமானதாகவே இருந்தாலும் அளவுக்கு மீறினால் கொஞ்சம் துன்பம் தானே…