Home ஆரோக்கியம் எப்போதெல்லாம் உடற்பயிற்சி வேணாம்?

எப்போதெல்லாம் உடற்பயிற்சி வேணாம்?

14

04-excersise200தொடர்ந்து ஜிம்மே கதியென்று கிடப்பவரா நீங்கள்…? அப்படியெனில் இந்தக் குறிப்புகளை கட்டாயம் நீங்கள் படித்தேயாக வேண்டும்!

உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும்.

எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியம்!

உடல் நலக்குறைவா?

உடல் நலம் சீராகும் வரை ஜிம்முக்குப் போகாதீர்கள். ‘சின்ன தலைவலி, ஜுரம் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும்’- இதை நாம் சொல்லவில்லை… மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

களைப்பாகவோ டென்ஷனாகவோ உணர்கிறீர்களா…?

இந்த மாதிரி நேரங்களிலும் உடற்பயிற்சியை அறவே தவிருங்கள். ரிலாக்ஸாக அமர்ந்து மனதுக்குப்பிடித்த எதையாவது செய்யுங்கள்.

உடலில் எங்காவது காயம் பட்டுள்ளதா..?

அந்தக் காயம் பெருங்காயமாகாமல் தடுக்க உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள். குணமடைந்தபிறகு மீண்டும் ஜிம் போகலாம்.

முன்தின இரவு ‘மப்பு’ தெளியவில்லையா?

‘தெளியாத நிலை’யில் உடற்பயிற்சிக் கூடம் போகாதீர்கள். ‘வொர்க் அவுட்’ எதுவும் வேலைக்காகாது. கூடுதலாக இரண்டு மணிநேரம் தூங்கினாலும் தப்பில்லை. அப்போதும் தெளியவில்லையா… நன்றாக காலை உணவு அருந்திவிட்டு, ரிலாக்ஸாக நடந்து சென்று வாருங்கள்!