திருமணம் எப்படி நடத்த கூடாது & எப்படி நடத்த வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவு கண்டிப்பாக படியுங்கள் ஆண்களுக்கோ பெண்களுக்கோ திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்கபோகிறோம் என்று பெற்றோர் சந்தொஷப்படாமல் அதற்குரிய செலவை பற்றி கவலைப்படுகிறார்கள்
தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று தன் உறவினர்களுக்கு சொன்னால், இவனுக்கு என்ன இப்போது திருமணம் முக்கியமா என்று கூட மனதில் நினைக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அவர் திருமணத்தின் போது காசு கட்டவேண்டும், தட்டுவரிசை, மொய் பணம் போன்றவை செய்ய வேண்டும் பல பணச்செலவுகள் உள்ளன, இதற்காக சந்தோஷமாக எடுத்து கொள்ளவேண்டிய விஷயத்தை கூட கஷ்டமாக எடுத்துக்கொள்கிறார்கள்
அக்கம் பக்கத்தினர்களுக்கு பத்திரிக்கைவைத்தால் அவர்கள் கூட கஷ்டமாக மனதில் நினைக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அவர்களும் திருமணத்தின் போது மொய் பணம் வைக்கவேண்டுமே என்ற செலவு உள்ளது அதன் காரணமாக அவர்களும் சந்தோஷ்மாக ஏற்றுக்கொள்வதில்லை
ஒரு திருமணத்தை நடத்த பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் செலவு செய்வதில்லை அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு செய்ய வேண்டிவுள்ளது, அவர்களின் குடும்ப சூழ்நிலை, கஷ்டம் எதுவும் தெரியாமல், திருமணம் செய்யப்போகிறோம் என்று பத்திரிக்கையை எடுத்துகொண்டு வந்துவிடுகிறார்கள்
பெண் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்ததும் அவளை கருவிலேயே கொல்லவேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு எதனால் தோன்றுகிறது என்று பார்த்தால் அவள் திருமணத்திற்கு தங்க நகைகள், வீட்டு உபயோக சீர்வரிசை பொருட்கள், மாப்பிள்ளைக்கு தங்க நகைகள்,வண்டி…. ஆகியவை வாங்கித்தரவேண்டும், இதன் காரணமாக பெற்றோர்களுக்கு பெண் குழந்தை என்றால் ஒரு சுமையாகத்தான் தெரிகிறது
ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு திருமணத்தினால் வரவாக தானே இருக்கிறது என்று நினைக்கிறோம் பெரும்பாலும் திருமணத்தை நடத்துவது மாப்பிள்ளை வீட்டாராகத்தான் இருக்கிறார்கள். வரவு இருந்தாலும் செலவும் இருக்கத்தானே செய்கிறது, அவற்றிக்கும் பணம் தேவை அல்லவா ?
பணம் இருப்பவன் ஆடம்பரமாக திருமணம் செய்வதை பார்த்து, கௌரவத்திற்காக நாமும் அதே போல் திருமணம்செய்ய வேண்டும் என்று நினைத்து பணத்தை மற்றவர் இடம் வட்டிக்கு கடன் வாங்கி திருமணம் செய்கிறார்கள், பிறகு திருமண கடனை அடைப்பதற்காக குழந்தை பெறுவதை கூட தள்ளிவைக்கிறார்கள் அல்லது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் அந்த திருமண கடனுக்கான வட்டியை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அசலை அடைத்தபாடேயில்லை, அதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து ஒரு தொழில் தொடங்கியிருந்தால் அசலையும் அடைத்திருப்பார்கள் லாபத்தையும் பெற்றிருப்பார்கள் மணமக்களும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்கள், அதை விட்டுவிட்டு திருமணத்தை ஆடம்பரமாக செய்து விட்டு குழந்தைகள் பிறந்த பிறகும் வட்டியை கட்டுவார்களா இல்லை குழந்தையை சந்தோஷமாக வளர்ப்பார்களா ? எதற்காக இந்த ஆடம்பர திருமணம். தாலி கட்டப்போகும் அந்த இரண்டு முன்று நிமிடத்திற்காக பல லட்சங்களை எதற்காக வீணாக்க வேண்டும் ? சிந்தித்து பாருங்கள் !
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பெண்ணிற்கு இத்தனை பவுன் நகை போட வேண்டும் மேலும் மாப்பிள்ளைக்கு இத்தனை பவுன் நகை, வண்டி, சீர்வரிசை ஆகியவைகளை கேட்பதால் பெண்வீட்டார் கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தன் மகளை திருமணம் செய்து வைத்து சந்தோஷமாக அனுப்பவேண்டிய பெற்றோர் தன் கடன் சுமையை நினைத்து வருந்தி கொண்டே வழி அனுப்புகிறார்கள், அந்த திருமணத்தன்று போட்டோவும், விடியோவும் எடுத்து வைத்துகொள்கிறார்கள், அந்த போட்டோவையும், விடியோவையும் பார்த்தால் என்ன தோன்றும் ? அது அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குமா அல்லது தான் திருமணத்திற்கு வாங்கிய கடன்களை நினைவுபடுத்துமா, மாப்பிள்ளையும் தன் மகளும் வீட்டிற்கு வந்தால் அவர்கள் வந்த வண்டியையும் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் பார்க்கும் போது தான் வண்டிக்கும் நகைக்கும் வாங்கிய கடனைத்தான் பெற்றோர்ருக்கு அது நினைவுப்படுத்தும்
பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை மற்றும் நகை போடுமாறு கேட்பதற்கு என்ன காரணமக அவர்கள் கூறுவதாவது
நாங்கள் எங்களுக்காகவா கேட்கிறோம் உங்கள் மாப்பிள்ளைக்கு பிற்காலத்தில் பணத்தேவை ஏற்படும் போது அந்த நகைகள் மற்றும் பணம் உபயோகமாக இருக்கும் அதற்காக தான் கேட்கிறோம் என்று கூறுகிறார்கள், இதில் இருந்து என்ன தெரிகிறது என்று பார்த்தால், மாப்பிள்ளையை பெற்றோர் தன் மகன் வருங்காலத்தில் கஷ்டபடுவான் என்றும் தன் மகன் முன்னேற மாட்டான் என்றும் அவர்களுக்கு முன்பே தெரிந்தது போல் கூறுகின்றனர், இது தன் மகனை அவர்களே கேவலப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் போல் உள்ளது
திருமணம் என்கின்ற பெயரில் பணத்தை வீண்விரயம் செய்வது போதாதென்று, திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் என்கின்ற பெயரில் அதையே திருமணம் போன்று ஆடம்பரமாக நடத்துகிறார்கள் அதற்கும் பத்திரிக்கை, மண்டபம், சாப்பாடு….. போன்று பல செலவுகள் செய்கிறார்கள்
இப்படி ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி அதை மகிழ்ச்சியாகவாவது நடத்தி முடிக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, இவர்கள் யாருக்காக இவ்வளவு ஆடம்பரமாக நடத்தினார்களோஅந்த உறவினர்களாளே அது சரியில்லை இது சரியில்லை என்று திருமணத்தில் பிரச்சனைகள் தான் ஏற்படுகின்றது
இப்போது நடக்கும் திருமணத்தை பார்க்கும் போது எனக்கு இது ஒரு”ஆண் விபச்சாரத்தை போன்று தான் தோன்றுகிறது”. சிறிது சிறிதாக பணத்தை பெற்றுக்கொண்டு சுகத்தை கொடுப்பதற்கு பதிலாக மொத்தமாக பெற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகத்தை கொடுக்கிறார்கள்
இந்த ஆடம்பர திருமணத்தினால் பல பெற்றேர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவைக்கமுடியவில்லையே என்று வருந்தி அவர்கள் தற்கொலை செய்துகொல்கின்றன,பல பெண்கள் 30 வயதாகிவிட்டது இனிமேல் நாமக்கு திருமணம் நடக்காது நாம் பெற்றேருக்கு சுமையாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தற்கொலை செய்துகொல்கின்றனர்,சிலர் தன் உடல் தேவைக்காக விபச்சாரத்தில் இடுபட்டுவிடுகின்றனர்,இவை அனைத்திற்கும் காரணம் ஆடம்பர திருமணமே
நான் இங்கு திருமணமே வேண்டாம் என்று கூறவில்லை, அதை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என்பதை தான் கூறுகிறேன், வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடக்கபோகும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் என்ன தவறு என்று தோன்றலாம், அதற்காக வாழ்க்கையில் பாதி ஆண்டுகள் அல்லது முழு ஆண்டுகளும் கடன் சுமையோடு வாழ வேண்டுமா, அதற்கு பதிலாக அந்த ஒரு நாளை எளிமையாக நடத்திவிட்டு மீதி ஆண்டுகளை மகிழ்ச்சியோடு வாழலாம் அல்லவா
பின்பு திருமணத்தை எப்படி தான் நடத்துவது ?
தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை காப்பாற்றுவது ஆணிண் கடமை, அதனால் தன் வருமானத்திற்கு ஏற்றவாறு நகையும் புடவையும் வாங்கிக்கொடுத்து, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும், திருமணத்தை அரசு திருமணப்பதிவு அலுவலகத்தில் செய்து பின்பு தன் வீட்டில் நெருங்கிய உறவினார்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து விருந்து அளித்து திருமண செய்தியை மகிழ்ச்சியுடன் கூறி அவர்களை வழி அனுப்பி திருமண வாழ்வை துவங்குவது சிறந்தது, சிலருக்கு வீட்டில் விருந்து அளிக்க இடப்பற்றாக்குறை இருப்பவர்கள், அவர்கள் சமூகக்கூடத்தில் விருந்தை அளிக்கலாம், இந்த திருமணத்தை நடத்த மிகக்குறைந்த செலவே ஆகும்
உங்களாள் முடிந்தால் அனாதைகளுக்கோ, ஊணமுற்றவர்களுக்கோ கண்பார்வையற்றவர்களுக்கோ உணவளியுங்கள், அது அவர்களுக்கு நீங்கள் ஒரு வேளை உணவு அளித்தோம் என்கிற மனநிறைவு கிடைக்கும்
இப்படி திருமணத்தை நடத்தி முடித்து திருமண வாழ்க்கையை துவங்கினால் வட்டியும் அசலும் கட்ட வேண்டும் என்று புலம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்த தேவையில்லை. தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு வைக்கபோவதும் இல்லை. அவர்களும் மனதார வாழ்த்திவிட்டு செல்வார்கள்
இப்படி திருமணம் நடத்தினால் திருமண வாழ்வு மகிழ்ச்சியாகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்கவும் செய்யலாம்
பணம்வைத்திருப்பவன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதை பார்த்து தான். இல்லாதவன் தானும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறான், ஆகையால் இருப்பவன் எளிமையாக திருமணத்தை நடத்தினால் இல்லாதவனும் எளிமையாக நடத்துவான்
ஏன் எளிமையாக நடத்துகிறீர்கள், ஆடம்பரமாக நடத்துங்களேன் என்று உங்களிடம் மற்றவர்கள் கேட்டால், அவர்களை பார்த்து நீங்கள் என் திருமணத்திற்கு “5 லட்சம் ரூபாய் இனாமாக” கொடுங்களேன் என்று கேளுங்கள், அப்பொழுது அவர்களுக்கு பணத்தின் அருமை தெரியும்
என் திருமணம் இப்படித்தான் நடக்கும்