Home சூடான செய்திகள் என் அடுத்த ஹீரோயின் நயன்தாராவா?- சிம்பு விளக்கம்

என் அடுத்த ஹீரோயின் நயன்தாராவா?- சிம்பு விளக்கம்

22

எப்போது என் படம் குறித்த அறிவிப்பு வந்தாலும், உடனடியாக நயன்தாரா அதில் நடிக்கிறார் என்பது போல செய்திகள் வருவது வழக்கமாகிவிட்டது (யாரு யாரு… யாரு இந்த வேலை பண்றது?), என்று கமெண்ட் அடித்துள்ள சிம்பு, தன் படம் எதிலும் நயன்தாரா நடிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததாக செய்தி வெளியானவுடன், அவர் என்னுடைய வட சென்னை படத்தில் நடிப்பதாக செய்தி வந்தது. வேட்டை மன்னனில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதாகவும், போடா போடியில் தோன்றுவதாகவும் சிலர் கூறியுள்ளனர். இப்போது எனது அடுத்த படம் வாலு-வில் அவர்தான் நாயகி என்று செய்தி போட்டுள்ளனர்.

இவை எதுவும் ஆதாரமில்லாத செய்திகள். நயன்தாரா என் படம் எதிலும் நடிக்கவில்லை.

தயவு செய்து என் படங்களோடு நயன்தாரா பெயரைச் சேர்த்து வெளியிடாதீங்க,” என்றார்.

ஏங்க… இந்த மாதிரி சினிமா பிட்டு எங்கேயாவது படிச்சதா ஞாபகமிருக்கா?!