35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும். 50 வயதுவரை ஹென்னா பயன்படுத்தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க் பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம்.
ஹேர் டையில் இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹேர்டையை பயன்படுத்துவது நல்லது. அமோனியா இல்லாத ஹேர் டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன. ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹேர் டை பயன்படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை “ஹேர் ஸ்பா” செய்து கொள்ளவும்.