Home சூடான செய்திகள் எதிர் பாலாருடன் உடல் ரீதியான உறவு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!

எதிர் பாலாருடன் உடல் ரீதியான உறவு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!

37

unnamedதாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.

01. நோ மன அழுத்தம்

உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் (Endorphin) என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.

02. நோய் எதிர்ப்பு சக்தி

உடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.

03. நிம்மதியான தூக்கம்

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.

04. ஹெல்தி இதயம்

உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

05. ஹார்மோன்களை பேலன்ஸ்

பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும்.

06. தசை பலம்

உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.

07. அழகு மெருகேறும்

உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது.