Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எடை இழப்பிற்கு ஆயுர்வேதம்

எடை இழப்பிற்கு ஆயுர்வேதம்

22

ஆயுர்வேதம் எப்படி எடை இழப்பிற்கு உதவுகிறது?
ஆயுர்வேதப் படி ஸ்வஸ்த புருஷ் (ஆரோக்கியமான தனிப்பட்டவர்) வரையறை/விள்க்கம் “சம தோஷா”ஆகிறது- மூன்று தோஷங்களும் சமநிலையில் இங்கே இருக்கிறது, சம அக்னிஷ்சா – இங்கே உங்கள் செரிமான தீ சமநிலையில் உள்ளது, சம தாது மல கிரியா – எல்லா தாதுக்கள் இருப்பும் மற்றும் மூன்று கழிவு செயல்முறைகள் அனைத்து போதுமான செயல்படக் கூடிய சூழ்நிலையில்,பிரசன்னா ஆத்மா இந்திரிய மனஹா- ஆன்மா, உணர்ச்சி உறுப்புகள் மற்றும் மனம் மகிழ்ச்சியில் உள்ளது. உடல் பருமன், அதிகமான மெதா தாதுவின் (கொழுப்பு திசுக்கள்) விளைவு ஆகும். மற்றும், எனவே அதிகரித்துள்ள மெதா தாதுவை சமநிலைப்படுத்தும் சிகிச்சையில் கவனம் செலுத்தப்படுகிறது.
எடை இழப்பிற்கு ஒரு மூன்று வழி அணுகுமுறை உள்ளது
ஆஹார்(Aahar) – உணவில் மாற்றம், தேவையற்ற பட்டினி என்று அர்த்தம் இல்லை
விஹார் (Vihar) –வாழ்க்கை முறை மாற்றங்கள்
சிகிச்சா(Chikitsa) –மருந்து மற்றும் பஞ்சகர்மா
ஆஹார் – இந்த நபர் அதிக கலோரியுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் (சன்டார்ப்பனிய ஆஹார்). ஆஹார் அல்லது ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் எந்த எடை இழப்புக்கும் ஒரு மைல்கல்லாக உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு 1300 – 1600 கலோரிக்குள் உங்கள் உணவைக் கட்டுப்படுத்தினால், அந்த கூடுதல் பவுண்டுகள் உருகத் தொடங்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் சத்துக்களுக்கும் ஒவ்வொரு கலோரியை எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று மனதில் வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் சர்க்கரை நிரம்பியுள்ள் கோலாக்கள் போன்ற வெற்றுக் கலோரி கொண்டவைகளை தவிர்ப்பதை . நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விஹார் –தினசரி,சுறுசுறுப்பான நடைபயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், போன்ற அன்றாட உடற்பயிற்சி உயர்வு மற்றும் டென்னிஸ், பேட்மின்டன், போன்ற வெளிப்புற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், எடை இழக்கத் தயாராக இருக்கும் ஒரு நபர், ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ வேண்டும். நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும். நாள் பொழுதில் தூங்குதல், அல்லது இரவில் நீண்ட நேரம் விழித்து, காலையில் நீண்ட நேரம் தூங்குவதைத் தவிர்க்கவும். உடல் அந்த கூடுதல் கிலோ எடையை இழக்க போதுமான தூக்கம் அவசியம். 11 மணிக்குத் தூங்கி காலை 6 மணிக்கு விழிப்பது உடலுக்கு சிறந்த நேரம்.
என்ன மாதிரியான ஆயுர்வேத சிகிச்சை, ஒரு நபருக்கு வேண்டும்?
மிதமான உடல் பருமன் விஷயத்தில்,மேலே குறிபிட்ட ஆஹார், விஷார் விஷயங்களுடன், நோயாளியின் உடல் வகை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகளுக்கேற்ப புனர்னவாடி கஷாயம், திரிபாலா குக்குலு, மெடோகர் குக்குலு, ஆரோக்கியவர்த்தினி வாட்டி, போன்ற சில மருந்துகள் சேர்ந்து தொடர்ந்து. சாப்பிடவும். தவிர, தைராய்டு ஹார்மோன் பிறழ்ச்சிக்கு சோதனையிடலும் தேவை. ஒரு வேளை, உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் வந்து மற்றும் நீங்கள் எடை கூடிவருவதை கவனிக்க நேர்ந்தால்,. உங்களுக்கு பி.சி.ஓ.எஸ் (பாலி சிஸ்டிக் கருப்பை நோய்க்குறி) இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இது போன்ற சந்தர்ப்பங்களில், ஒரு நபரின் சிகிச்சை முறை அதற்கேற்ற படி வேறுபடுகிறது.
உடல் பருமன் விஷயத்தில்; வாமன போன்ற பஞ்சகர்மா நடைமுறைகள் (தூண்டப்பட்ட வாந்தி)), விரெசன (தூண்டப்பட்டு மலம் கழித்தல்) லேகன் பஸ்தி (மலத் துவாரத்தின் வழியாக மருந்து கலந்த நீர் ஏற்றிக் குடல் கழுவுதல்) மற்றும் உத்வரத்னம் (மூலிகை பொடி மசாஜ்) தேவையானதாக இருக்கும்.
எவ்வளவு சீக்கிரமாக ஒரு நபர் இதன் பலன்களைக் காண முடியும்?
ஒரு நபர் மேலே குறிப்பிட்டுள்ள உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பின்பற்றினார் என்றால், அவர்கள் ஒரு மாதத்திற்கு இரண்டு கிலோகிராம் எடை இழக்கலாம்.
ஏதாவது பக்க விளைவுகள் உள்ளனவா?
ஒரு நல்ல ஆயுர்வேத மருத்துவர் வழிகாட்டுதலின் கீழ் செய்யவில்லை என்றால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் எடை இழக்க உதவும் சில குறிப்புகள் இங்கே:
காலையில் எழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்திற்குள் பழங்கள் சாப்பிடவும்.
அதிகப்படியான அளவு வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும். மிதமானது முக்கியமாக உள்ளது.
பாதாம், வேர்கடலை, அத்தி, பூசணி விதை மற்றும் ஆளி விதை போன்ற சில உணவுகள், நீங்கள் உணவுக்கு இடையே ஆரோக்கியமான சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுத்தலாம்.
உங்கள் வளர்சிதை மாற்றம் வேகமாக்க உதவும் சுமார் 4-5 கொறுக்காப்புளி(கார்சீனிய) 11 மணியளவில் சாப்பிடுங்கள்.
நீங்கள், டீ அல்லது காபி குடித்தால். இதில் சர்க்கரை சேர்க்க கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
போதுமான தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி, வேகமாக உங்கள் வயிறு நிரம்ப உதவும். எனவே நீங்கள் உங்கள் உணவு உண்ணும் போது கூட தண்ணீரை உறிஞ்ச முயற்சிக்கலாம்.
தூங்குவதற்கு முன், ஒவ்வொரு இரவும் இசபகோல் தூள் ஒரு தேக்கரண்டி ஒரு கிளாஸ் தண்ணீருடன் அருந்த வேண்டும். இது அடுத்த நாள் காலை உங்கள் வயிற்றை சுத்தம் செய்யவும் மற்றும் உங்கள் உடலில் உள்ள நச்சுகளை அழிக்கவும் உதவும்.
இங்கே நீங்கள் தினசரி அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரி எண்ணிக்கைகளின் ஒரு அட்டவணை:
காலை உணவு – 300 கலோரிகள்
மதிய உணவு – 400 கலோரிகள்
சிற்றுண்டி – 200 கலோரிகள்
இரவு உணவு – 450 கலோரிகள்
மொத்தம் – 1350 கலோரிகள்